96 வயது மூதாட்டியை 18 வயது இளைஞர் திருமணம் செய்துகொண்ட சம்பவம் மெக்சிகோவில் பேசுபொருளாகியுள்ளது. மணமக்கள் இருவருக்கும் இடையே 78 ஆண்டுகள் வயது வித்தியாசம் இருப்பதுதான் இந்தச் சம்பவத்தின் முக்கியக் கவன ஈர்ப்பாக அமைந்துள்ளது.
மெக்சிகோவின் குவிண்டானா ரூ (Quintana Roo) மாகாணத்தில் உள்ள ஒத்தோன் பி. பிளாங்கோ (Othón P. Blanco) நகராட்சியில் இந்தத் திருமணம் நடைபெற்றுள்ளது. அந்நாட்டின் தேசிய புள்ளியியல் மற்றும் புவியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள திருமணப் புள்ளிவிவரங்களில் இந்த விவரம் இடம்பெற்றுள்ளது.
மெக்சிகோவில் இதுபோன்ற அதிக வயது வித்தியாசம் கொண்ட திருமணங்கள் ஏற்கெனவே நடந்துள்ளன. மிச்சோக்கன் மாகாணத்தின் மொரேலியா பகுதியில், 19 வயது இளைஞர் ஒருவர் 96 வயது மூதாட்டியைத் திருமணம் செய்துள்ளார். இந்தத் தம்பதிக்கு இடையே 77 ஆண்டுகள் வயது வித்தியாசம் உள்ளது.
அதேபோல், தமௌலிபாஸ் மாகாணத்தின் எக்சிகோடென்காட்ல் பகுதியில் 18 வயது இளம்பெண் ஒருவர் 90 வயது முதியவரைத் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இடையிலான வயது வித்தியாசம் 72 ஆண்டுகள்.
தற்போது 78 ஆண்டுகள் வயது வித்தியாசத்தில் நடைபெற்றுள்ள இந்தத் திருமணம், மெக்சிகோவில் அதிக வயது வித்தியாசம் கொண்ட திருமணங்கள் குறித்த விவாதத்தை மீண்டும் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
Also Read: இனி விமானத்தில் இந்த பவர் பேங்கிற்கு தடை.. பயணிகளே மாடல் நம்பரை செக் பண்ணுங்க!



