அனைவரும் ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துவிட்டது! வேடிக்கை பார்த்தால் அதிமுகவை காப்பாற்ற முடியாது! சசிகலா பரபரப்பு அறிக்கை!

EPS Sasikala 2026

அதிமுக, தனது 54 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து, 55-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அனைந்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலா, பிரிந்து கிடக்கும் அனைவரும் ஒன்றுபட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக வலியுறுத்தியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 1972-ஆம் ஆண்டு ஏழை எளிய மக்களின் நலனுக்காக எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அதிமுக, அவரது வாழ்நாள் முழுவதும் கண்ணின் இமைபோல காக்கப்பட்டது என நினைவுகூர்ந்துள்ளார். புரட்சித் தலைவருக்குப் பிறகு இக்கட்சியை ஜெயலலிதா இந்திய அளவில் மூன்றாவது பெரிய இயக்கமாக உயர்த்தியதில் தமது பங்கும் உண்டு என்பதை யாரும் மறுத்துவிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இயக்கம் தொடர்ந்து சறுக்கல்களையும், தொடர் தோல்விகளையும் சந்தித்து வருவதற்கு சிலரின் சுயநலமும், அவர்கள் எடுத்த தவறான முடிவுகளுமே காரணம் என சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். இயக்கத்தின் பலனை அனுபவித்த சிலர் ஆதாயத்திற்காக வெளியேறி இருக்கலாம்; ஆனால், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் வழியில் வந்த உண்மையான தொண்டர்கள், பிரிந்து சென்றவர்கள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்கள் அனைவரும் எப்போது மீண்டும் ஒன்றிணைவார்கள் என்ற ஏக்கத்தோடு காத்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்” என்ற அண்ணாவின் பொன்மொழியை சுட்டிக்காட்டிய அவர், தொண்டர்களின் எண்ணங்கள் ஈடேற அனைவரும் ஒன்றுசேர வேண்டிய தருணம் இதுவென அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு மேலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் இயக்கத்தை காப்பாற்றுவது கடினமாகிவிடும் என்றும், இன்னும் நூற்றாண்டுகள் கடந்தாலும் மக்கள் இயக்கமாக இது தொடர வேண்டும் என்ற ஜெயலலிதாவின் சபதம் வீணாகிவிடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். மீண்டும் தமிழகத்தில் அம்மாவின் நல்லாட்சியை உருவாக்க, அதிமுக ஒரு வலிமைமிக்க பேரியக்கமாக மீண்டும் மலர வேண்டும் என இறைவனை வேண்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More : தமிழகத்தில் விலைவாசி உயர்வுக்கு இதுதான் காரணம்! அரிசி, சர்க்கரை, பருப்பு விலை எப்போது குறையும்? அமைச்சர் கொடுத்த ரிப்ளை!

Next Post

குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்! ஞாயிற்றுக்கிழமையும் ரேஷன் கடைகள் இயங்கும்! உணவுத்துறை அறிவிப்பு!

Thu Oct 15 , 2026
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகைகளை முன்னிட்டு தொடர் விடுமுறை வருவதால், பொதுமக்களின் வசதிக்காக வரும் அக்டோபர் 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம் போல் இயங்கும் என்று உணவுத்துறை அறிவித்துள்ளது. வருகிற 19ஆம் தேதி (திங்கட்கிழமை) ஆயுத பூஜை மற்றும் 20-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட உள்ளது. இதனால் நியாயவிலை கடை ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தொடர் விடுமுறை […]
Ration Shop 2025

You May Like