ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகைகளை முன்னிட்டு தொடர் விடுமுறை வருவதால், பொதுமக்களின் வசதிக்காக வரும் அக்டோபர் 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம் போல் இயங்கும் என்று உணவுத்துறை அறிவித்துள்ளது.
வருகிற 19ஆம் தேதி (திங்கட்கிழமை) ஆயுத பூஜை மற்றும் 20-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட உள்ளது. இதனால் நியாயவிலை கடை ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தில் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய ரேஷன் பொருட்களை முன்கூட்டியே சிரமமின்றி வாங்கிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில், முந்தைய விடுமுறை நாளான அக்டோபர் 18 ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்து கடைகளும் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், ஞாயிற்றுக்கிழமை பணிபுரியும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அதனை ஈடுகட்டும் வகையில், அடுத்த மாதம் (நவம்பர்) 21-ஆம் தேதியை மாற்று விடுமுறை நாளாக உணவுத்துறை அறிவித்துள்ளது.



