தமிழகத்தில் விலைவாசி உயர்வுக்கு இதுதான் காரணம்! அரிசி, சர்க்கரை, பருப்பு விலை எப்போது குறையும்? அமைச்சர் கொடுத்த ரிப்ளை!

Venkataramanan 2026

தமிழகத்தில் அரிசி மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்வு குறித்து எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் விளக்கம் அளித்தார்.


தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”மாநிலத்தில் உள்ள 2.28 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு எவ்வித தடையுமின்றி அத்தியாவசிய உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வெளிமார்க்கெட் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழகத்தில் செயல்படும் 49 அமுதம் அங்காடிகள் மற்றும் 211 கூட்டுறவு கடைகள் வழியாக தரமான மளிகை பொருட்கள் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வருகின்றன. கூட்டுறவு கடைகளில் பொன்னி அரிசி கிலோ ரூ.60-க்கும், துவரம் பருப்பு கிலோவுக்கு ரூ.10 குறைக்கப்பட்டு தற்போது ரூ.130-க்கும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

நகர்ப்புற மக்கள் அதிகம் விரும்பி வாங்கும் கர்நாடகா மற்றும் ஆந்திரா பொன்னி அரிசியின் வரத்து குறைந்ததே தற்போதைய விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்றார். வெளிமாநில வரத்து குறைவை பயன்படுத்தி, ரெட்ஹில்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில தனியார் ஆலைகள் தமிழக அரிசியையும் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றன. இதனை உடைக்கும் வகையில், தமிழ்நாட்டில் விளையும் உயர்தர சன்ன ரக அரிசியை 250 கூட்டுறவு அங்காடிகள் மூலமாக கிலோ வெறும் ரூ.30 என்ற அதிரடி விலையில் இன்று முதல் விற்பனை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் தேவைக்கேற்ப இரண்டு, மூன்று அல்லது ஐந்து கிலோ அளவுகளில் இதனை நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் சில குறிப்பிட்ட பின்னணி கொண்ட ஆலை உரிமையாளர்கள் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி அதிக லாபம் ஈட்ட அரிசியை பதுக்குவதாக தகவல்கள் வந்துள்ளன. இத்தகைய பதுக்கல்களை வேரோடு ஒழிக்க மாவட்ட அளவில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் 95 சதவீதத்திற்கும் அதிகமான அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் பொது விநியோக திட்டத்தின் கீழ் நியாயவிலைக்கடை அரிசியையே முழுமையாக நம்பியுள்ளனர். பொதுமக்களுக்கு தேவையான 2.94 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் கையிருப்பில் உள்ளதாகவும், முறைகேடுகள் இன்றி வெளிப்படையான முறையில் தரமான பொருட்கள் தொடர்ந்து வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Read More : ரேஷன் பாமாயில் டெண்டர் கேன்சல்!. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?அதிர்ச்சியில் தமிழக அரசு!.

Next Post

வடகிழக்கு பருவமழையால் எந்த மாவட்டத்துக்கு ஆபத்து? வெள்ளத்தில் சென்னை தத்தளிக்குமா? வானிலை மையம் பரபரப்பு தகவல்!

Thu Oct 15 , 2026
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியுள்ள நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை வானிலை ஆய்வு மையத்தில் ஆய்வு மைய‌ இயக்குனர் துரை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது: தென்மேற்கு பருவமழை இன்று, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் முழுமையாக விலகியது. அதே நேரத்தில், வடகிழக்கு திசை காற்று தென்னிந்திய தீபகற்ப பகுதிகளில் வீசத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால், கடலோர ஆந்திரப் […]
Natural Disaster Rain 2025

You May Like