இந்திய பொருட்கள் விற்பனைக்கு முட்டுக்கட்டை போடும் சீனா! அமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்!. நிர்மலா சீதாராமன்!

nirmala sitharaman

இந்தியப் பொருட்களை சீனச் சந்தையில் விற்பனை செய்வதில் ‘வரிசாரா தடைகளே’ மிகப்பெரிய முட்டுக் கட்டையாக இருக்கின்றன என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டியுள்ளார். தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் நடைபெற்ற உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆண்டு கூட்டத்தின் போது, அட்லாண்டிக் கவுன்சிலின் மைக்கேல் குகல்மேனுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்தார்.


இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் வர்த்தகச் சமநிலையின்மை தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு சீன சந்தையில் இந்தியப் பொருட்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதே முக்கியக் காரணம் என்று நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார். ஜெனரிக் மருந்துகள், மாட்டிறைச்சி, காய்கறிகள் மற்றும் அழுகக்கூடிய விவசாயப் பொருட்கள் ஆகியவற்றில் இந்தியா உலக அளவில் முன்னணியில் இருந்தபோதிலும், சீனாவில் அவற்றுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளால் வர்த்தகம் பாதிக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

தாவர ஆரோக்கியம் மற்றும் நோய் தடுப்பு விதிகள் போன்ற சாக்குகளைச் சொல்லி சீனா இந்தியப் பொருட்களைத் தடுக்கிறது என்றும், ஆனால் பிற நாடுகளைப் போலப் பழிவாங்கும் நோக்கில் பதிலடி வரி விதிக்காமல் இந்தியா எப்போதும் பேச்சுவார்த்தை வழியையே தேர்வு செய்கிறது என்றும் அமைச்சர் கூறினார். மேலும், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் விரைவில் நிறைவடையும் என எதிர்பார்ப்பதாகவும், ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளுடனும் இந்தியா வர்த்தக உறவை வலுப்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

1newsnationuser5

Next Post

ஆயுத பூஜை விடுமுறைக்கு சொந்த ஊர் போறீங்களா? சென்னையில் உங்களுக்கான பஸ் எங்கு ஏறணும்? போக்குவரத்துறை அறிவிப்பு!

Fri Oct 16 , 2026
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தொடர் விடுமுறை வருவதால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களின் பயண நெரிசலைக் கட்டுப்படுத்த 5 முக்கிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. நகரின் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, செல்லும் வழித்தடங்களின் அடிப்படையில் பேருந்து நிலையங்கள் பிரிக்கப்பட்டு இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தென் மாவட்டங்கள் […]
TN Bus 2025 1

You May Like