ஆயுத பூஜை விடுமுறைக்கு சொந்த ஊர் போறீங்களா? சென்னையில் உங்களுக்கான பஸ் எங்கு ஏறணும்? போக்குவரத்துறை அறிவிப்பு!

TN Bus 2025 1

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தொடர் விடுமுறை வருவதால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களின் பயண நெரிசலைக் கட்டுப்படுத்த 5 முக்கிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. நகரின் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, செல்லும் வழித்தடங்களின் அடிப்படையில் பேருந்து நிலையங்கள் பிரிக்கப்பட்டு இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக கிளாம்பாக்கத்தில் இருந்து பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், கோயம்புத்தூர், பண்ருட்டி, நெய்வேலி, கடலூர், சிதம்பரம் மற்றும் திருச்சி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திண்டுக்கல், பழனி உள்ளிட்ட பகுதிகளுக்கான பேருந்துகள் இங்கிருந்து புறப்படும். மேலும், செஞ்சி மார்க்கமாக திருவண்ணாமலை, போளூர், வந்தவாசி மற்றும் சேத்துப்பட்டு செல்லும் பயணிகளுக்காக, கிளாம்பாக்கம் சிஎம்டிஏ காலநிலை பூங்கா அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து முனையம் செயல்படும்.

டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகள் சோதனை அடிப்படையில் மறைமலை நகர் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பயணிகளின் வசதிக்காக, கிளாம்பாக்கம் மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்து நிறுத்தத்தில் இருந்து மறைமலை நகருக்கு கட்டணமில்லா இணைப்பு பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்பட உள்ளன.

அதேபோல, கோயம்பேட்டில் இருந்து, கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி செல்லும் பேருந்துகளும், வேலூர், காஞ்சிபுரம், ஓசூர், பெங்களூரு, திருத்தணி மற்றும் திருப்பதி மார்க்கமாகச் செல்லும் பேருந்துகளும் வழக்கம்போல் புறப்படும் என போக்குவரத்துத் துறை தெளிவுபடுத்தியுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலின்றி முன்கூட்டியே திட்டமிட்டு பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Read More : இந்திய பொருட்கள் விற்பனைக்கு முட்டுக்கட்டை போடும் சீனா! அமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்!. நிர்மலா சீதாராமன்!

Next Post

போட்டியை கண்டு அஞ்ச மாட்டோம்! நாங்க ரெடி! எலான் மஸ்க்கிற்கு பதிலடி கொடுத்த ரிலையன்ஸ் அம்பானி!

Fri Oct 16 , 2026
இந்தியாவில் எலான் மஸ்க்கின் ‘ஸ்டார்லிங்க்’ செயற்கைக்கோள் இணையச் சேவையை தொடங்குவது தொடர்பாக பல்வேறு கருத்து மோதல்களும் விவாதங்களும் நடைபெற்று வரும் நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது. ஸ்டார்லிங்க் உள்ளிட்ட எந்தவொரு சர்வதேச நிறுவனத்துடன் நேரடிப் போட்டியை எதிர்கொள்ள தாங்கள் தயாராக இருப்பதாகவும், அதேநேரத்தில் இந்தியாவில் செயல்படும் அனைத்து நிறுவனங்களும் நாட்டின் சட்டதிட்டங்கள் மற்றும் அரசு கொள்கைகளுக்கு முழுமையாக உட்பட்டு நடக்க வேண்டும் என்றும் […]
Elon Musk vs Ambani 2026

You May Like