Flash : பேரவையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்..? இந்த தேதிகளில் எம்.எல்.ஏ.க்களுக்கு புத்தாக்கப் பயிற்சி.. சபாநாயகர் அறிவிப்பு..!

jcd prabakar

தமிழக சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் இன்று சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ ஒவ்வொரு முறையும் தேர்தல் முடிந்து அவை கூடுவதற்கு முன்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு புத்தாக்க பயிற்சி வழங்குவது நடைமுறையில் இருக்கிறது.. இந்த முறையில் 17-வது சட்டமன்றப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வரும் 16, 17 ஆகிய தேதிகளில் புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட உள்ளது..


சென்னை கலைவாணர் அரங்கில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை இந்த பயிற்சி நடைபெற உள்ளது.. முதல்வர் விஜய் தொடங்கி வைக்கும் இந்த புத்தாக்க பயிற்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், சட்டமன்ற பேரவை விதிகள், பேரவை நடைமுறைகள் குறித்தும் பேரவை செயலாளர், அரசுத்துறை செயலாளர்கள் மற்றும் வல்லுனர்கள் கலண்டு கொண்டு பயிற்சி அளிக்க உள்ளனர்..

இந்த புத்தாக்கப் பயிற்சியில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளுமாறு நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.. புதியவர்கள், பழையவர்கள் என்றல்ல அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் இதில் பங்கேற்கலாம்.. அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.. முதல்வர் விஜய் இந்த பயிற்சியை தொடங்கி வைத்து பேச இருக்கிறார்.. அரசு செயலாளர்கள் பேச உள்ளனர்.. சட்டமன்ற பேரவை விதிகளுக்கு உட்பட்டு ஒரு சட்டமன்ற உறுப்பினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்ன கேள்வி எழுப்ப வேண்டும்? என்பது குறித்து வல்லுனர்களை வைத்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது..” என்று தெரிவித்தார்..

Read More : உளறல்நிதி, உண்மைநிதியாக பேசத் தயாரா? அறிவாலய மியூசிக்கிற்கு அடிமையான தீர்ந்து போன சக்தி..” உதயநிதி, இபிஎஸ் மீது தவெக அட்டாக்..!

RUPA

Next Post

குளித்த உடனேயே AC அறைக்குள் சென்றால் என்ன நடக்கும்? இதைப் பற்றித் தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க..!

Fri Jun 12 , 2026
கோடைக்காலத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பது உடலுக்கு இதமாகத் தோன்றலாம். ஆனால், வெயிலின் தாக்கத்தைத் தாங்க முடியாமல் பலர் மேற்கொள்ளும் ஒரு பழக்கம் இப்போது மருத்துவ நிபுணர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. குளிப்பதற்கு முன் அறையில் ஏசியை (AC) ஓடவிடுவது அல்லது குளித்து முடித்ததும் உடல் ஈரம் காயும் முன்பே ஏசிக்கு முன்னால் அமர்வது சமீபகாலமாக ஒரு வழக்கமாகிவிட்டது. இதனால் உடலுக்கு ஏற்படும் ஆபத்துகள் மற்றும் அதிர்ச்சியூட்டும் சுகாதார உண்மைகள் […]
optimist ac 1

You May Like