ஓபிஎஸ் மட்டும் எதுக்கு? சேகர்பாபுவையும் அதிமுகவில் சேர சொல்லுங்க! எஸ்பி வேலுமணிக்கு அதிமுக கண்டனம்! மீண்டும் வெடிக்கும் போர்!

eps sp velumani

திமுகவில் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ-வாக இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுவது நகைப்புக்குரியது என அதிமுக சட்டமன்ற கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆவேசமாக விமர்சித்துள்ளார்.


சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவிலிருந்து வெளியேறி தற்போது திமுக சட்டமன்ற உறுப்பினராகச் செயல்பட்டு வரும் பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என வேலுமணி பேசுவது வினோதமானது என குறிப்பிட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இவரது போக்கைப் பார்த்தால், ஏற்கனவே திமுகவில் இணைந்து அமைச்சர்களாக உள்ள முத்துசாமி, சேகர்பாபு, ரகுபதி போன்றோரையும் கூட மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று சொல்வார் போலிருக்கிறது; அவர்களை எப்படி மீண்டும் கட்சிக்குள் கொண்டுவர முடியும்?” என கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய அவர், “அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தற்போது கூட்டணியில் ஒற்றுமையாகப் பயணித்து வருகின்றனர். ஆனால், வேலுமணி காழ்ப்புணர்ச்சியோடு பேசி வருகிறார். அதிமுக தலைமை பிறப்பித்த உத்தரவை மீறி, சட்டமன்றத்தில் தவெக-வுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் எவ்வாறு மீண்டும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியை அமைப்பார்கள்?” என்று சாடினார்.

அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு மூலக்காரணமாக இருந்து, கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முதலில் பேசியதே எஸ்.பி.வேலுமணிதான் என்பதை சுட்டிக்காட்டிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, முடிவுகளை எடுக்கும் முழு அதிகாரமும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒருவருக்கு மட்டுமே உண்டு என்றார். தவெக அமைச்சரவையில் பதவி கிடைக்கவில்லை என்ற ஒரே ஏமாற்றத்தால், அதிமுகவை பலவீனப்படுத்தும் நோக்கில் சிலர் இத்தகைய உண்மைக்கு மாறான வதந்திகளைப் பரப்பி வருவதாகவும் அவர் கடுமையாக குற்றம்சாட்டினார்.

Read More : பைக்கை அடித்து தூக்கிய லாரி! துடிதுடித்து இறந்த 2 மாணவர்கள்! தஞ்சையில் அதிர்ச்சி!

Next Post

நீங்க உள்ள வரக்கூடாது! அண்ணாமலையார் கோயிலில் வெடித்த சர்ச்சை! அமைச்சர்கள் - செய்தியாளர்கள் இடையே கடும் வாக்குவாதம்!

Sat Oct 17 , 2026
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் தீபத் திருவிழா முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய வந்த அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் ரமேஷ் ஆகியோருடன் செய்தியாளர்கள் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா வரும் நவம்பர் 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. அதன் பாதுகாப்பு ஏற்பாடுகளை அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் ரமேஷ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். […]
Thiruvannamalai 2026

You May Like