தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின் வெட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் மின் வாரிய அதிகாரிகள் இதனை மறுத்து வருகின்றன.. ஊரக பகுதிகளில் மின் தேவை அதிகரிப்பு, நிலத்தடி மின்கம்பிகள் பழுது ஆகியவற்றால் மின் தடை ஏற்படுகிறது.. அதனை சரி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது..
இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன் என்பது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்தார்.. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ மக்களுக்கு தடையற்ற, நம்பகமான மின் விநியோகத்தை வழங்க மின்வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.. நேற்று மட்டும் மின்வெட்டு தொடர்பாக சென்னையில் 7 குழுக்கள் போடப்பட்டுள்ளது.. அனைத்து அதிகாரிகளும் நேற்றிரவு முழுவதும் ஆய்வு பணிகளில் மேற்கொண்டனர்.. இதனால் பல இடங்களில் மின் விநியோகம் சீரானது..
ஒரு சில இடங்களில் சில தனிநபர்களின் தவறுகளால் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது.. அந்த நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.. அவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்..
மின்வாரியம் இன்று சுமார் ரூ.2 லட்சம் கோடி கடனில் உள்ளது. 1,40,000 பேர் வேலை பார்க்க வேண்டிய இடத்தில் 1 லட்சம் பேர் தான் பணியில் இருக்கின்றனர்.. பெரும்பாலான இடங்களில் பழைய டிரான்ஃபார்ம்கள் உள்ளது.. மின் தடைகளை சரி செய்ய, நிபுணர்களை வைத்து ஒரு குழு அமைத்து அவர்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்..
ஏதேனும் ஒரு தனிநபரின் காரணமாக மின் தடை ஏற்பட்டிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.. வெகு விரைவில் அனைத்து பிரச்சனைகௌம் சீர் செய்யபப்டும்.. எந்த இடத்தில் எல்லாம் அதிகாரிகளால் தவறு நடந்ததோ அவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.. 95% மின்வாரிய பணியாளர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள்.. ஒரு சிலர் பணியை முறையாக செய்யவில்லை.. மின்சாரத் தட்டுப்பாடு எதுவும்.. விரைவில் சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும்..” என்று தெரிவித்தார்..



