ஆசிய விளையாட்டில் அசத்திய தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன்! ரூ.1.25 கோடி பரிசு அறிவித்தார் முதல்வர் விஜய்!

Thulasi 2026

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை துளசிமதி முருகேனுக்கு ரூ.1.25 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜப்பானில் நடக்கும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பேட்மிண்டன் விளையாட்டில், பெண்கள் இரட்டையர் SL3-SU5 பிரிவில் தங்கப் பதக்கமும், கலப்பு இரட்டையர் SL3-SU5 பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்ற இந்திய அணிகளுக்கும், இந்த அணிகளில் இடம்பெற்றிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்.

வீராங்கனை துளசிமதி முருகேசனின் சாதனைகளை பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.1.25 கோடி உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அவர், இதுவரை 3 பதக்கங்களை வென்று தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அவரது தொடர் வெற்றி, சாதிக்கத் துடிக்கும் இளம் தலைமுறையினருக்கு புதிய நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கிறது. அவரைப் போன்ற திறமைமிக்க அனைத்து விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குத் தமிழ்நாடு அரசு என்றும் உறுதுணையாக நிற்கும் என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

Read More : உடல்நல பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறியும் AI!. மருத்துவ உலகையே மாற்றப் போகும் புதிய முயற்சி!. EX ஆப்பிள் அதிகாரியின் அசத்தல் தொழில்நுட்பம்!.

Next Post

2028 ஒலிம்பிக் கிரிக்கெட் விதிகளில் அதிரடி மாற்றம்! T20 உலகக்கோப்பை அட்டவணையை வெளியிட்டது ICC!

Fri Oct 23 , 2026
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், 2028-ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக்கில் மகளிர் கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச் சுற்று விதிமுறைகளில் திருத்தம் செய்துள்ளது. இதன்படி, ஒலிம்பிக்கை நடத்தும் அமெரிக்க மகளிர் அணி நேரடியாக தகுதி பெறுவதற்கான தரவரிசை தேவையைப் பூர்த்தி செய்யத் தவறினால், அந்த கூடுதல் வாய்ப்பு 2027 பிப்ரவரியில் நடைபெறும் தொடக்க ‘மகளிர் சாம்பியன்ஸ் டிராபி’ தொடரின் தரவரிசை அடிப்படையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் அக்டோபர் மாதம் நடைபெற்ற […]
olympic cricket rules 30kb

You May Like