நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் மனதில் இன்றளவும் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கிறார் மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். அவரை ஒருமுறையாவது நேரில் சந்தித்துவிட வேண்டும் என்ற ஆசை இருந்தும், அருகில் இருந்தபோதே அந்த வாய்ப்பைத் தவறவிட்ட அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா. இந்தச் சந்திப்பு கிடைக்காமல் போன ஏக்கம் மட்டுமல்ல, சுஷாந்தின் அகால மரணமும் தன்னைப் பெரிதும் பாதித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் நடிக்கத் தொடங்குவதற்கு முன்பிருந்தே சுஷாந்த் சிங் ராஜ்புத் மீது தனக்கு ஈர்ப்பு இருந்ததாக ஐஸ்வர்யா கூறியுள்ளார். அவருடன் ஒரு புகைப்படமாவது எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பமாக இருந்துள்ளது.
கோவாவில் நடைபெற்ற திரைப்பட விழாவுக்குச் சென்றிருந்தபோது, சுஷாந்தைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என நம்பியுள்ளார். விழாவுக்குப் பிறகு நடைபெறும் இரவு விருந்தில் அவர் கலந்துகொள்வார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தார். ஆனால், சுஷாந்த் அங்கு வராததால் அந்தத் திட்டம் கைகூடவில்லை.
பின்னர், தான் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு அடுத்த அறையில்தான் சுஷாந்தும் தங்கியிருந்தார் என்பது தெரியவந்துள்ளது. அருகிலேயே இருந்தும் அவரைச் சந்திக்க முடியாமல் போனது மிகுந்த ஏமாற்றத்தை அளித்ததாக ஐஸ்வர்யா நினைவுகூர்ந்துள்ளார்.
சுஷாந்த் சிறந்த நடிகர் என்றும், இளம் வயதிலேயே அவர் உயிரிழந்தது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ள ஐஸ்வர்யா, அவர் மீதான தனது அபிமானம் இன்றளவும் குறையவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
Also Read: ‘குக் வித் கோமாளி’ புகழ் செப் தாமு காலமானார்… ரசிகர்கள் அதிர்ச்சி!



