fbpx

மணப்பெண்ணை மிளகாய் பொடி தூவி கடத்த முயன்ற பெற்றோர்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

மணமேடையில் இருந்து மணமகளை மிளகாய் பொடி தூவி குடும்பத்தினர் கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக திருமணம் என்றாலே இரு வீட்டாருக்கும் பரபரப்பான நிலை தான் இருக்கும். திருமணத்திற்கு வருபவர்களை பார்த்துக் கொள்வதில் இருந்து திருமண ஏற்பாடுகள் வரை கவனித்துக் கொள்ள வேண்டும். ஆனால், ஆந்திராவில் பெற்றோரே மணப்பெண் மீது மிளகாய் பொடி தூவி கடத்த முயன்றுள்ளனர்.

ஆந்திர மாநிலம் கடையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சினேகா மற்றும் பட்டின வெங்கடானந்த். இவர்கள், இருவரும் ஒன்றாக கல்லூரியில் படித்து வந்தபோது காதலித்துள்ளனர். பின்னர், மணமகன் வீட்டாரின் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, கடந்த 21ஆம் தேதி நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு மணமகள் வீட்டாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அப்போது மணமகளின் குடும்பத்தினரும், உறவினர்களும் வந்து கலந்து கொண்டனர். அங்கு, மேடையில் மணமகனுடன் இருந்த மணமகளை பார்த்த அவரது தாயும், சகோதரரும் சேர்ந்து இழுத்துச் சென்றனர். இதனை தடுத்த மணமகனின் வீட்டார் மீது மிளகாய் பொடியைத் தூவியுள்ளனர். இதில், மணமகளை மணமகன் வீட்டார் சேர்ந்து மீட்டுள்ளனர். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More : செம குட் நியூஸ்..!! அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி உயர்வு..!!

Chella

Next Post

"இந்து கோயில் கட்டியதால் தான் துபாய் வெள்ளத்தில் மிதக்கிறது" - வைரலாகும் பாகிஸ்தானியரின் பேச்சு!

Tue Apr 23 , 2024
துபாயில் வரலாறு காணாத மழை பெய்வதற்கு அபுதாபியில் கட்டப்பட்ட இந்து கோயில்தான் காரணம் என்றும், அல்லாஹ்வின் கோபத்தை மழையின் வடிவில் துபாய் எதிர்கொண்டிருக்கிறது எனவும் பாகிஸ்தானியர் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. பாலைவன பகுதியான வளைகுடா நாடுகளில் பெரும்பாலும் செயற்கை முறையிலேயே மழை பொழிவிக்கப்படுகின்றன. அங்கு மழை பொழிவது ஆச்சரியமான ஒன்று எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், வளைகுடா நாடுகளுக்கு அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, ஓமன், பஹ்ரைன், […]

You May Like