fbpx

தொடர் கனமழை..! வால்பாறை தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை..! ஆட்சியர் அறிவிப்பு

தொடர் மழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர், காந்திபுரம், கணபதி, பீளமேடு, உக்கடம், பாப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட நகர் பகுதிகளிலும் வடவள்ளி, மருதமலை, தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன் பாளையம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது. இதனால், ஒரு சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதேபோல, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Chennai, Ranipettai, Tiruvallur schools closed on Nov 18 due to heavy rains  alert - Education Today News

இந்நிலையில், தமிழகம், புதுவை, காரைக்காலில் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நீலகிரி, கோவை மாவட்டங்களில் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கோவை மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

Chella

Next Post

சமையல் எண்ணெய் விலை அதிரடி குறைப்பு..! உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவு...!

Thu Jul 7 , 2022
சமையல் எண்ணெய் விலையை குறைக்குமாறு உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியா தனது சமையல் எண்ணெய் தேவையில், 60 சதவீதத்தை இறக்குமதி செய்து வருகிறது. கடந்த சில மாதங்களாக, சர்வதேச சந்தையில் விலை அதிகரித்து வந்ததால், இந்தியாவில் அதன் சில்லரை விலையும் அதிகரித்தது. ஆனால், சமீபகாலமாக சர்வதேச சந்தையில் விலை குறைந்து வருகிறது. அதனால், இந்தியாவில் கடந்த மாதம் லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை விலை குறைக்கப்பட்டது. அதன் […]
சூப்பர் அறிவிப்பு..!! அதிரடியாக குறைந்தது சமையல் எண்ணெய் விலை..!! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!!

You May Like