fbpx

T20 World Cup : டி20 உலகக் கோப்பை தொடரை இலவசமாக பார்க்கலாம் – ஹாட்ஸ்டார் அறிவிப்பு!

டிஸ்னி + ஹாட்ஸ்டார் தனது மொபைல் செயலியில் வரவிருக்கும் டி 20 உலகக் கோப்பையை இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்ய அனுமதிப்பதாக அறிவித்துள்ளது.

உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியானது, வரும் ஜூன் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறவுள்ளது. இந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து உள்ளிட்ட 20 நாடுகள் கலந்துகொண்டு மொத்த 55 போட்டிகளில் விளையாட உள்ளன.

இதில் ஏ பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தானும் இதே பிரிவில் உள்ளது. இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் ஜூன் 9-ம் தேதி நியூயார்க்கில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் செயலி மூலம் இலவசமாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இது குறித்து கருத்து தெரிவித்த டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இந்தியாவின் தலைவர் சஜித் சிவானந்தன், “ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை- 2024 தொடரை மொபைலில் இலவசமாக வழங்குவதன் மூலம், கிரிக்கெட் விளையாட்டை மேலும் அணுகக்கூடியதாகவும், நாடு முழுவதும் பரந்த பார்வையாளர்களை சென்றடைவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம். கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளையும் மொபைலில் இலவசமாக வழங்கினோம். இது பார்வையாளர்களை கணிசமாக விரிவுபடுத்த எங்களுக்கு உதவுகிறது” என்று கூறினார்.

Next Post

கஞ்சாவுடன் சிக்கிய சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்! கோர்ட் அதிரடி..

Wed May 8 , 2024
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல யூட்டியுபர் சவுக்கு சங்கரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மதுரை போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள், பெண் போலீசார் குறித்துஅவதூறாக பேசிய வழக்கில் கடந்த 4-ஆம் தேதி தேனி மாவட்டத்தில் கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.  பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் […]

You May Like