Jai Singh Prabhakar: 1920 ஆம் காலக்கட்டத்தில் விலை உயர்ந்த கார் என்றால், அது ரோல்ஸ் ராய்ஸ். ஆங்கிலேயர்களின் இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் வெறும் விலை உயர்ந்த கார் மட்டுமில்லாமல், ஒருவரின் கவுரமாகவும் பார்க்கப்பட்டது. இந்தியாவில் அக்காலக்கட்டத்தில் மகாராஜாக்களும், மிகப்பெரிய தொழிலதிபர்களும் மற்றும் பெரிய பதவிகளில் இருந்த ஆங்கிலேயர்கள் மட்டுமே இந்த காரை வைத்திருந்தனர். மேலும் உலகம் முழுவதும் இந்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு என்று பெரும் மவுசு இருந்தது.அப்படிப்பட்ட இந்த காரை ஒருவர் குப்பைகளை எடுத்து செல்ல உபயோகித்தார் என்றால் நம்ப முடிகிறதா..? அதற்கு பின்னால் ஒரு பெரிய கதையே உள்ளது. அதைப் பற்றி இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்வார் மகாராஜா ஜெய் சிங் பிரபாகர், மிகப்பெரிய செல்வந்தர் மற்றும் சக்தி வாய்ந்த மன்னராக இருந்தவர். மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்தவர். இவரின் ஆடம்பர வாழ்க்கையை எளிமையாக சொல்லவேண்டும் என்றால், இவர் ஒருமுறை அவருக்கு மிகவும் பிடித்த குதிரையை பாம்பேவிற்கு அனுப்ப சிறப்பு ரயிலை ஏற்பாடு செய்தவர். மேலும் அந்த குதிரைக்கு 5 ஸ்டார் ஹோட்டலில் விலை உயர்ந்த அறையை ஏற்பாடு செய்திருந்தார். இதுபோன்ற நடவடிக்கைகள் மட்டுமின்றி ஒரு நாளுக்கு பல்வேறு விதமான உடைகளை மாற்றுவார். ஒவ்வொரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போதும் வெவ்வேறு வகையான தலைப்பாகைகளை அணிவார்.
இப்படிப்பட்ட செல்வசெழிப்பான மன்னர் ஜெய் சிங் பிரபாகர், 1920 ஆம் ஆண்டு லண்டனுக்கு சென்றபோது அங்குள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார் ஷோரூமிற்கு எளிமையான உடையுடன் சென்றார். அங்கு இருக்கும் ஊழியர்களிடம் கார்களை பார்க்க கேட்டுள்ளார். இவர் யார் என்று தெரியாமல், இவரின் உடைகளை பார்த்து, இவர் எங்கு விலை உயர்ந்த காரை வாங்க போகிறார் என்று நினைத்து உதாசீன படுத்தியுள்ளனர். மேலும், அவரை தரைக்குறைவாக நடத்தியுள்ளனர்.
இதில் கோபமடைந்த மன்னர் ஜெய் சிங் பிரபாகர் அங்கிருந்து கிளம்பிவிட்டார். அதனைத்தொடர்ந்து இந்தியாவிற்கு திரும்பிய அவர், அவரின் ஆட்களுடன் அவரின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கார் ஷோரூமிற்கு சென்றுள்ளார். தவறை உணர்ந்த ஊழியர்கள் அவருக்கு ராஜ மரியாதை வழங்கியுள்ளனர். அங்கு ஷோரூமில் இருந்த 6 கார்களை அங்கேயே முழு பணத்தையும் கொடுத்து வாங்கிய மன்னர் ஜெய் சிங், மேலும் இங்கிலாந்திலிருந்து வரவைக்கக்கோரி 4 கார்களுக்கு ஆர்டர் கொடுத்தார்.
கார்கள் இந்தியாவை அடைந்தவுடன், அந்த கார்களை அவர் தனக்கு என்று உபயோகிக்காமல் யாரும் எதிர்பார்க்காத விதம் டெல்லி முனிஸ்சிபாலிட்டிற்கு குப்பைகளை எடுத்து செல்லும் குப்பை வண்டியாக பயன்படுத்த கொடுத்து விட்டார். அவரின் இந்த செயல் ஆங்கிலேயர்கள் மட்டுமின்றி அக்காலத்து மன்னர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
உலகின் விலை உயர்ந்த கெளரவ சின்னமாக இருந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை குப்பை வண்டியாக மன்னர் ஜெய் சிங் மாற்றியது, மிகப்பெரியளவில் பேசப்பட்டது. இங்கிலாந்தில் ஊழியர்கள் நடத்திய விதத்திற்கு, பழிவாங்குவதற்கும், தோற்றத்தைப் பார்த்து எடைப்போடும் அவர்களுக்கு பாடம் புகுத்துவதற்காகவும் மன்னர் ஜெய் சிங் இதனை செய்துள்ளார்.
தங்களில் மதிப்பிக்க ரோல்ஸ் ராய்ஸ் கார், டெல்லி சாலைகளில் குப்பை பெறுக்கிகொண்டு இருப்பதைப் பார்த்த நிறுவனம், அவர்களில் புகழை காப்பாற்றி கொள்ள விரைந்து மன்னர் ஜெய் சிங்கிற்கு தந்தி அனுப்பினர். அதில் அவர்களில் ஊழியர்கள் செயலிற்காக மன்னிப்பு கேட்டனர். மேலும், காரை குப்பை வண்டியாக உபயோகிப்பதை நிறுத்தக் கோரிக்கை விடுத்தனர்.
Readmore: அதிர்ச்சி!… மனச்சோர்வுக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்து!… இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!