இந்தியாவில் FLiRT என்ற புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 91 பேருக்கு இந்த பாதிப்பு உறுதியாகியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த 2019ம் ஆண்டு பரவிய கொரோனா, உலகம் முழுவதும் மக்களின் வாழ்கை முறைகளை மாற்றியது. இருப்பினும் அவ்வபோது, கொரோனாவின் புதிய மாறுபாடு விடாமல் துரத்தி வருகிறது. அதனால் எந்தவித பெரிய பாதிப்புகளும் இல்லையென கூறுகின்றனர் விஞ்ஞானிகள். அண்மையில் பரவிய கொரோனாவின் மற்றொரு மாறுபாடான ஓமிக்ரான் வைரஸால் பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில், FLIRT என்று சொல்லப்படக் கூடிய புதிய வகை கொரோனா தொற்று இந்தியாவில் அதிகம் பரவி வருகிறது. ஓமிக்ரான் வைரசின் துணை வகையான இந்த புதிய தொற்றுநோய் ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் அமெரிக்காவில் பல மக்களிடையே பரவியது. இது, KP.2 மற்றும் KP.1.1 ஆகியவை மாறுபாடுகளில் உள்ளது, அவற்றின் மரபணுக்களில் இருந்து பெறப்பட்ட எழுத்துக்களின் அடிப்படையில் ‘FLiRT’ என்று பெயரிடப்பட்டுள்ளன. தற்பொழுது, இந்தியாவின் மகாராஷ்டிராவின் தானே, புனே, நாசிக் என பல நகரங்களில் 91 பேருக்கு இந்த புதிய வகை மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வகை வைரஸ்கள் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் அதிகம் பரவி வருகிறது.
இந்தியாவில் தற்போது பரவிவரும் FLIRT வகை கொரோனா வைரஸ் குறித்த முழுமையான தகவல்கள் ஏதும் ஆராய்ச்சியாளர்களிடம் இல்லை. ஆனால், இவை நோய் எதிர்ப்பு சக்தியை மீறி உடலினை தாக்கும் திறன் கொண்டவை என்பது மட்டும் தெரியவந்துள்ளது. இந்தியாவில் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களில் 1 சதவீதத்தினருக்கு மட்டுமே FLiRT வகை தொற்று உள்ளதால், இதன் வீரியத் தன்மை குறித்த தகவல்கள் ஏதும் இல்லை. இருந்தாலும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த புதிய வகை மாறுபாட்டின் அறிகுறிகள் JN.1 கொரோனா அறிகுறியை போல் இருக்கலாம் என என சொல்லப்படுகிறது. அதன்படி, இந்த கொரோனாவால் “தொண்டை புண், மூக்கு ஒழுகுதல், இருமல், தலை மற்றும் உடல் வலிகள், காய்ச்சல், நெரிசல், சோர்வு மற்றும் மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் இருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் இதனால், சிலருக்கு வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளும் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சுவாசிப்பதில் சிரமம் அல்லது தொடர்ந்து மார்பு வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Readmore: ‘தியேட்டர்கள் அடுத்த 10 நாட்கள் மூடல்..!’ ரசிகர்கள் அதிர்ச்சி.. என்ன காரணம்?