தமிழ்நாட்டில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இந்நிலையில் தான் அடுத்ததாக உள்ளாட்சித் தேர்தல், 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தான், தற்போதில் இருந்தே கட்சியை வலுப்படுத்த திமுக திட்டமிட்டுள்ளது.
திமுகவை பொறுத்தவரை பெரும்பாலும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மாவட்ட செயலாளர்களாக பதவி வகிக்கின்றனர். இதனால், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய இளைஞரணி மாவட்ட செயலாளர்களுக்கு முக்கியத்தும் அளிக்கும் வகையில், மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திமுக திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.