fbpx

இயக்குனர் ஷங்கருடன் மீண்டும் இணையும் ரஜினி..!! வரலாற்று படமாமே..!! வெளியான மாஸ் அப்டேட்..!!

‘எனக்கு எண்டே இல்லடா’ இந்த வசனத்தை கேட்கும் போது வடிவேலு நம் கண் முன் வந்து போவார். ஆனால், உண்மையிலேயே இந்த வசனத்திற்கு சொந்தக்காரர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இதுதான் பிரச்சனையின் கடைசி படம் என்று பல படங்கள் பேசப்பட்டது. பாபா படத்திற்கு பிறகு ரஜினி சினிமாவை விட்டு விலகப் போகிறார் என்று கூட சொல்லப்பட்டது. ஆனால், அவர் அடுத்த இன்னிங்ஸ் தொடங்கி 20 ஆண்டுகளாக பின்னி பெடல் எடுத்து வருகிறார். அண்ணாத்தே படம் சூப்பர் ஸ்டாருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

ஆனால் ஜெயிலர் அந்த பேச்சையே அப்படியே மாற்றி விட்டது. ஜெயிலர் படம் கொடுத்த உத்வேகத்தில் தான் ரஜினி அடுத்தடுத்து வேட்டையின் மற்றும் கூலி படங்களை தொடங்கி நடித்துக் கொண்டிருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தன்னுடைய கடைசி படம் இருக்க வேண்டும் என ரஜினி ஆசைப்பட்டார். அதுதான் ரஜினியின் கடைசி படம் என பேசப்பட்டது. ஆனால், தற்போது வேறு ஒரு தகவல் உருவாகி ரஜினி ரசிகர்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கூலி படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் ஷங்கருடன் இணைந்து ஒரு படம் பண்ண இருக்கிறார். அதுவும் வரலாற்று கதை. ஷங்கர் ஏற்கனவே வேள்பாரி எனும் நாவலை சூர்யாவை வைத்து இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது, இந்த நாவல் கதையில் ரஜினி தான் நடிக்க இருக்கிறார். இந்த படம் ஆயிரம் கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. ஈரோஸ் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இதுவரை ரஜினி-ஷங்கர் கூட்டணியில் வெளியான படங்கள் & பட்ஜெட்டை தற்போது பார்க்கலாம்.

சிவாஜி – 50 கோடி பட்ஜெட்

எந்திரன் – 132 கோடி பட்ஜெட்

எந்திரன் 2 – 570 கோடி பட்ஜெட்

சிவாஜி – 50 கோடி பட்ஜெட்

Read More : இந்த பிரச்சனை உங்களுக்கு இருக்கா..? அலட்சியம் காட்டிய நபருக்கு நிகழ்ந்த சோகம்..!! மருத்துவர் எச்சரிக்கை..!!

English Summary

After Kooli, actor Rajinikanth is going to do a film with director Shankar. That is a historical story.

Chella

Next Post

Menstrual Hygiene Day 2024: "கறைகளை மறைக்க வேண்டாம்" உலக மாதவிடாய் சுகாதார தினம்..!

Tue May 28 , 2024
உலக மாதவிடாய் சுகாதார தினம் : ஒவ்வொரு ஆண்டும் மாதவிடாய் கால சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை பெண்களுக்கு ஏற்படுத்தும் வகையில்  மே 28ஆம் தேதி மாதவிடாய் சுகாதார தினம் அனுசரிக்கப்படுகிறது.  ஏனெனில் ஒரு மாதவிடாய் சுழற்சி சராசரியாக 28 நாட்கள் ஆகும். மேலும் ஒரு நபருக்கு பொதுவாக ஐந்து நாட்கள் மாதவிடாய் ஏற்படுகிறது. எனவே ஆண்டின் ஐந்தாவது மாதத்தின் 28 வது நாள் மாதவிடாய் சுகாதார தினமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பண்பாட்டு ரீதியாகவும், […]

You May Like