fbpx

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு…! வானிலை மையம் கொடுத்த அலர்ட்…!

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.மேலும், வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில்ஓரிரு இடங்களில் கனமழை நீடிக்க வாய்ப்புள்ளது. 29-ம் தேதி ஓரிரு இடங்களிலும், ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 2-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு, வடக்கு வங்கக்கடல் , வடக்கு அந்தமான் கடல், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

English Summary

Chance of rain till August 2 in Tamil Nadu

Vignesh

Next Post

பாரிஸ் ஒலிம்பிக்!. திக்.திக்.!. முதல் ஹாக்கி போட்டியில் த்ரில் வெற்றி!. நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபாரம்!

Sun Jul 28 , 2024
Paris Olympics! Thick. Thick.!. Thrill win in the first hockey match!. India is great after beating New Zealand!

You May Like