இந்தியாவில் எப்போதும் தங்கத்துக்கு தனி மவுசு உள்ளது. தொடர்ந்து மக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வரும் சூழலில், சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்து சென்ற நிலையில், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.7 ஆயிரத்தை நெருங்கியது.
இந்நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான வரி குறைக்கப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களாக ஆபரணத் தங்கத்தின் விலையும் குறைந்து காணப்பட்டது. ஆனால், கடந்த 2 நாட்களாக தங்கம் விலை உயர்ந்துள்ளது.
அந்தவகையில் இன்றைய நிலவரப்பட்டி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.51,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.6,460-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையை பொறுத்தவரை கிராம் ரூ.91-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.91,000-க்கும் விற்பனையாகிறது.