fbpx

தப்பி ஓடிய பிரதமர்.. பற்றி எரியும் போராட்டம்..!! என்ன நடக்கிறது வங்க தேசத்தில்?

ஆங்கிலேய பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து திங்கட்கிழமை நாட்டை விட்டு வெளியேறினார் என்று ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 1971-ம் ஆண்டு வங்கதேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கடந்த ஜூலை மாதம் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், காவல்துறையை ஏவி போராட்டக்காரர்களைக் கொன்றதற்கு நீதி கேட்டு நேற்று பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், வங்கதேச தலைநகர் டாக்காவின் மத்திய சதுக்கத்தில் குவியத் தொடங்கினர். மேலும், பல்வேறு நகரங்களிலும் வங்கதேச போராட்டம் வெடித்தது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்த போராட்டக்காரர்கள், இனி மக்கள் யாரும் அரசுக்கு வரி செலுத்தக் கூடாது என்றும், அரசு ஊழியர்கள் மற்றும் மற்றும் ஜவுளித் துறை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும் நாடு தழுவிய ஒத்துழையாமை போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

இந்த நிலையில், இட ஒதுக்கீடு தொடர்பான மாணவர் போராட்டம் உக்கிரமடைந்த சூழலில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார் எனவும் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் எனவும் அந்நாட்டின் ராணுவ தளபதி வாக்கார் உஸ்-ஜமான் உறுதி செய்தார். மேலும், சட்ட ஒழுங்கை நிலைநிறுத்துவோம் எனவும் அவர் பேசியுள்ளார். ஷேக் ஹசினா மற்றும் அவரது தங்கை ஷேக் ரிஹானா ஆகியோர் பிரதமர் இல்லத்தில் இருந்து பாதுகாப்பான இடம் நோக்கி சென்றுவிட்டதாக அவர் தெரிவித்தார்.

ஷேக் ஹசினா வெளியேற்றத்திற்கு பின்னர் ராணுவ தளபதி ஆற்றிய உரையில், போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் எனவும் ராணுவ தளபதி உறுதியளித்தார். எனவே, போராட்டத்தை கைவிட்டு அமைதி பாதைக்கு திரும்ப வேண்டும் எனவும் ராணுவ தளபதி கோரிக்கை வைத்துள்ளார். வங்கதேசத்தில் இடைக்கால ஆட்சி அமைய ராணுவம் துணை நிற்கும் எனவும் ராணுவ தளபதி பேசியிருக்கிறார். மேலும், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இடைக்கால அரசு அமைத்து நாட்டை நடத்துவோம் எனவும் தெரிவித்தார். 

English Summary

Sheikh Hasina resigns, leaves Bangladesh, interim government to take control

Next Post

'நீங்கள் வாதாடுவதற்கு தயாராக இல்லை’..!! ’எத்தனை முறைதான் வாய்தா கேட்பீங்க’..!! செந்தில் பாலாஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!!

Mon Aug 5 , 2024
Judges condemn the enforcement department for seeking adjournment of senthil balaji case saying he is not ready to plead

You May Like