fbpx

பங்களாதேஷில் வசிக்கும் இந்துக்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்…! இடைக்கால ஆலோசகர் உறுதி…!

பங்களாதேஷில் வசிக்கும் இந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மையினரும் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் இருப்பது உறுதி செய்யப்படும் என பங்களாதேஷ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்களாதேஷ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் பேராசிரியர் முகமது யூனுசுடன் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த தொலைபேசி அழைப்பின் போது, ஜனநாயக முறையிலான, நிலையான, அமைதியான மற்றும் முன்னேற்றகரமான பங்களாதேஷிற்கு இந்தியா எப்போதும் ஆதரவு அளிக்கும் என பிரதமர் உறுதிபட தெரிவித்துள்ளார். பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் வாயிலாக பங்களாதேஷ் மக்களுக்கான ஆதரவு தொடரும் என்ற இந்தியாவின் உறுதிப்பாட்டையும், பிரதமர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இந்துக்கள் மற்றும் பிற அனைத்து சிறுபான்மை சமுதாயத்தினரும் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளித்த பேராசிரியர் யூனுஸ், பங்களாதேஷில் வசிக்கும் இந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மையின குழுக்களும் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் இருப்பதற்கு இடைக்கால அரசு முன்னுரிமை அளிக்கும் என்று உறுதி அளித்துள்ளார். இருநாடுகளின் தேசிய முன்னுரிமைக்கு ஏற்ப இருதரப்பு நட்புறவை மேலும் முன்னெடுத்து செல்வதற்கான வழிமுறைகள் குறித்தும், இருதலைவர்களும் விவாதித்தனர்.

English Summary

Hindus living in Bangladesh will be assured of security

Vignesh

Next Post

நீட் தேர்வு தோல்வியால் மாணவன் தற்கொலை..!! தஞ்சையில் சோகம்!!

Fri Aug 16 , 2024
It has been reported that a student committed suicide after failing the NEET exam near Pattukottai in Thanjavur district.

You May Like