fbpx

ப்ரோ.. ஒரு ரவுண்டு போலாமா? ஸ்டாலினிடம் கேட்ட ராகுல் காந்தி.. ஜாலியா பதில் சொன்ன முதலமைச்சர்..!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றுள்ளார். அங்கு சுமார் பல கோடி ரூபாய் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகின்றது. அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜிம்முக்கு செல்வது, விளையாட்டு என தன் உடலை பிட்டாக வைத்துக் கொள்கிறார். அந்த வகையில் முதல்வர்  ஸ்டாலின் காலையில் சைக்கிளில் ரைடு சென்றுள்ளார். அவர் ஜாலியாக பாட்டு படித்துக் கொண்டே சைக்கிள் ஓட்டிய வீடியோவை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஸ்டாலின் சைக்கிள் ஓட்டும் வீடியோவை குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “சகோதரரே.. சென்னையில் நாம் இருவரும் ஒன்றாக எப்போது சைக்கிள் ஓட்டுவோம்?” எனக் கேட்டுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் – காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இருவரும் பல்வேறு சமயங்களில் ஒருவொருக்கொருவர் தங்கள் அபரிமிதமான அன்பை வெளிப்படுத்தி உள்ளனர். ராகுல் காந்தி, தன் அண்ணன் என ஸ்டாலினை குறிப்பிடுவார். அரசியல் தலைவர்களில் நான் அண்ணன் எனச் சொல்லும் ஒரே தலைவர் ஸ்டாலின் தான் என்றும் ராகுல் காந்தி பேசி இருக்கிறார்.

ராகுலின் கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். அன்புள்ள சகோதரரே.. உங்களுக்கு ஓய்வு கிடைக்கும் போது, சென்னையில் ஒன்றாக பயணிப்போம்.. நான் உங்களுக்கு கொடுக்க வேண்டிய இனிப்பு பெட்டி இன்னும் நிழுவையில் உள்ளது.. நமது சைக்கிள் பயணத்திற்கு பிறகு, என் வீட்டில், இனிப்புகளுடன் சுவையான மதிய விருந்தை அனுபவிப்போம். என மகிழ்ச்சியாக பதிவிட்டிருந்தார்.

Read more ; அடுத்த 6 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் மழை..!! வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்..!!

English Summary

To Rahul Gandhi’s question when the two can cycle together in Chennai, Chief Minister M.K.
Stalin replied.

Next Post

பாலியல் புகார்.. நமக்குள்ளே பேசிக்கலாம்.. மீடியா வேண்டாம்..!! - நடிகர் சங்கம் போட்ட 7 தீர்மானம்

Wed Sep 4 , 2024
Actors Sangam has issued a report that 7 resolutions have been passed and recommended regarding sexual allegations.

You May Like