fbpx

எமனாக மாறிய பலூன்.. தொண்டையில் சிக்கி துடிதுடித்து உயிரிழந்த 13 வயது சிறுவன்..!!

ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள கங்கிரா (Kangra) மாவட்டம், ஜவாளி கிராமத்தை சேர்ந்தவர் விவேக் குமார் (வயது 13). சிறுவன் அங்குள்ள ஷிட்புர்கர்ஹ் பகுதியில் செயல்பட்டு வரும் அரசுப்பள்ளியில் பயின்று வருகிறார். கடந்த வியாழக்கிழமை அன்று சிறுவன் வழக்கம்போல பள்ளிக்கு புறப்பட்டு சென்றுள்ளான். பள்ளி வாசலில் வைத்து தான் வைத்திருந்த பலூனை ஊத முயற்சித்துள்ளார்.

அப்போது, பலூன் வெடித்ததில் சிறுவனின் தொண்டையில் சிக்கியுள்ளது. இதனால் அவருக்கு வலி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனை அறிந்த ஆசிரியர்கள் உடனே விவேக்கை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிறுவனை முதலில் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்த நிலையில், முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சையாக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதன்கோட், அமன்தீப் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.

இந்நிலையில் விவேக்கின் தந்தை, தாய் மற்றும் அவரது சகோதரி ஆகியோர் மருத்துவமனையின் செலவுக்கு பணம் இல்லாமல் தவித்தனர்.  பள்ளி தலைமை ஆசிரியரின் கோரிக்கையின்பேரில், முன்னால் எம்.பி நிராஜ் பார்தி விவேக்கின் சிகிச்சைக்காக ரூபாய் 50,000 நன்கொடையாக வழங்கினார். இதைத்தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் 2 நாட்கள் கழித்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more ; மகளிர், ஆண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.15 லட்சம்..!! தமிழ்நாடு அரசு சூப்பர் அறிவிப்பு..!!

English Summary

A 13-year-old boy has died after a balloon burst into his throat

Next Post

பூமியை நெருங்கும் ஆபத்து... அடுத்து இதுதான் நடக்கும்... அதிர்ச்சி தகவல் சொன்ன இஸ்ரோ..!!

Tue Sep 10 , 2024
Indian Space Research Organization (ISRO) has warned that a huge meteorite is coming very close to Earth

You May Like