fbpx

Rain: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு… தமிழகத்தில் 17-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு …!

தமிழகத்தில் 17-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம். மேற்கூறிய இடங்களில் 17-ம் தேதி வரை லேசானது முதல்மிதமான மழை பெய்யக் கூடும்.

சென்னை மற்றும் புறநகரைப் பொருத்தவரை இன்றுவானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசிலபகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 96.8 முதல் 98.6 டிகிரியை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 80.6 – 82.4 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் இருக்கக்கூடும்.

தென்கிழக்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

English Summary

Western direction wind speed variation … The chance of rain till 17th

Vignesh

Next Post

அசத்தல் அறிவிப்பு...! குரூப் 4 தேர்வில் காலி பணியிடங்கள் 6724 ஆக உயர்வு...!

Thu Sep 12 , 2024
In addition to 480 vacancies in the Group 4 exam

You May Like