fbpx

லீவ்…! மிலாது நபி பண்டிகை.. செப்.17-ம் தேதி பாஸ்போர்ட் அலுவலகம் விடுமுறை அறிவிப்பு..!

தமிழகத்தில் மிலாது நபி பண்டிகை செப் 17 ஆம் தேதி நடைபெறும் என தமிழக அரசின் காஜி அறிவுறுத்தி உள்ளார். இதன் காரணமாக தமிழ்நாட்டில் செப்டம்பர் 17-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இறை தூதரான முகம்மது நபியின் பிறந்த நாளான மிலாது நபி உலகெங்கும் உள்ள இஸ்லாமிய மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பிறை தெரியாததால், இந்த ஆண்டு மிலாது நபி செப்டம்பர் 17-ம் தேதி கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து தான் தமிழக அரசு செப்டம்பர் 16-ம் தேதிக்கு பதிலாக செப்டம்பர் 17-ம் தேதி மிலாது நபி நாளில் விடுமுறை அறிவித்துள்ளது.

அதே போல, மிலாது நபி விடுமுறை 2024, செப்டம்பர் 16-க்கு பதில் செப்டம்பர் 17 அன்று அறிவிக்கப்பட்டுள்ளதால், அன்றைய தினம் சென்னை அண்ணா சாலையில் உள்ள பாஸ்போர்ட் சேவை மைய அலுவலகம் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக செப்டம்பர் 17 அன்று அறிவிக்கப்பட்ட அனைத்து நேர்முக பணிகளும் செப்டம்பர் 16 அன்று மேற்கொள்ளப்படும். இது தொடர்பாக, செப்டம்பர் 17 அன்று நேர்முகப்பணிக்காக ஒதுக்கப்பட்டவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Milad Nabi festival.. Passport office holiday notification on 17th September

Vignesh

Next Post

சிறுவர்களின் சிறுநீரில் தயாரிக்கப்படும் உணவு!. ஆவலுடன் உண்ணும் சீன மக்கள்!. ஏன் தெரியுமா?

Fri Sep 13 , 2024
China Collecting Urine from Young Boys, Buckets Placed in Schools; You'll Be Shocked to Know Why

You May Like