fbpx

குமரிக்கடல் பகுதி மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…! இன்று 10 மாவட்டத்திற்கு அலர்ட்

இன்று முதல் 15-ம் தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

லட்சத்தீவு, அதை ஒட்டிய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அதேநேரம், குமரிக்கடல், அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 15-ம் தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று சேலம், கிருஷ்ணகிரி தருமபுரி, திருப்பத்தூர், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களிலும், நாளை மேற்கண்ட பகுதிகளுடன் மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென்மேற்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வரும்12-ம் தேதி வரை சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

English Summary

Upper Atmospheric Downward Circulation

Vignesh

Next Post

அக். 30, 31, நவம்பர் 1 ஆகிய மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை...! பாஜக கோரிக்கை

Thu Oct 10 , 2024
Oct. 30, 31 and 1st of November, Tasmac shops will be closed for three days

You May Like