fbpx

பீரங்கி பயிற்சி மையத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து 2 அக்னி வீரர்கள் உயிரிழப்பு…!

மகாராஷ்டிரா மாநிலத்தில் எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு பாய்ந்த விபத்தில் அக்னிவீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள பீரங்கி பயிற்சி மையத்தில் அக்னிவீரர்கள் வழக்கம்போல் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இந்த விபத்தில் அக்னிவீரர்கள் கோஹில் விஸ்வராஜ் சிங்(20), சைபத் ஷிட்(21) ஆகியோர் படுகாயமடைந்தனர். உடனடியாக இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்ற வருகிறது.

அக்னி வீரர்கள் இறந்தால் மத்திய அரசு கொடுக்கும் இழப்பீடு.

அக்னிவீரர்களின் விதிமுறைகளின்படி, போரில் உயிரிழக்க நேர்ந்தால், குடும்ப உறுப்பினர்களுக்கு 48 லட்சம் பங்களிப்பு இல்லாத காப்பீடும், ரூ.44 லட்சம் இழப்பீடும் மற்றும் அவரது சம்பளத்தில் 30% பங்களிப்பையும் பெறுவார்கள். சேவா நிதி திட்டத்திற்கு அக்னிவீர், அரசாங்கத்தின் சமமான பங்களிப்புடன், வட்டியும் சேர்த்து வழங்கப்படும். கூடுதலாக, அவர்கள் இறந்த தேதியிலிருந்து அவர்களின் நான்கு ஆண்டு பதவிக்காலம் முடிவடையும் வரை செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையையும் பெறுவார்கள்.

English Summary

2 Agni soldiers killed in shelling at artillery training centre

Vignesh

Next Post

ஒரே நேரத்தில் 3 பேருடன் கள்ள உறவு..!! இஷ்டத்திற்கு உல்லாசம்..!! கடைசியில் உண்மை தெரிந்ததும் அரங்கேறிய கொடூரம்..!!

Sat Oct 12 , 2024
Fake relationship with 3 people at the same time..!! Fun to your heart's content..!! When the truth is finally known, the horror unfolds..!!

You May Like