fbpx

Womens T20 Worldcup!.வெளியேறியது இந்திய அணி!. PAK.ஐ வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது நியூசி!.

Womens T20 Worldcup: 2024 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து இந்திய அணி வெளியேறியது.

2024 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி, பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, எப்படியும் பாகிஸ்தான் அணி வென்றுவிடும், இந்தியா அரையிறுதிக்கு முன்னேறும் என இந்திய ரசிகர்கள் எதிபார்த்தனர். ஆனால் 56 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி தோல்வியடைந்து ஏமாற்றமளித்தது.

பாகிஸ்தான் வென்றிருந்தால், இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல ஒரு வாய்ப்பு இருந்தது, ஆனால் தோல்வியடைந்ததால் இரு அணிகளும் தொடரில் இருந்து வெளியேறின. பாகிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்து அணி 2016-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.

2024 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பரபரப்பான தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஸ்காட்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்ட நிலையில், ஒவ்வொரு அணியும் 4 லீக் போட்டிகளில் விளையாடின. இதில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும்.

இந்நிலையில் 4 போட்டிகளையும் வென்ற ஆஸ்திரேலியா மற்றும் 3 போட்டிகளை வென்ற நியூசிலாந்து ஆகிய இரண்டு அணிகளும் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. 4 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணி குரூப் சுற்றோடு உலகக்கோப்பையிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Readmore: புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க போறீங்களா..? அப்படினா இந்த ஈசியான வழிமுறையை தெரிஞ்சிக்கோங்க..!!

English Summary

Womens T20 Worldcup!. The Indian team is out!. Newsy entered the semi-finals after defeating PAK.

Kokila

Next Post

இந்த 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்... பொது மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம்...! வானிலை மையம் எச்சரிக்கை

Tue Oct 15 , 2024
Heavy rain is likely to occur in 22 districts of Tamil Nadu today, according to the Meteorological Department.

You May Like