fbpx

RSS ரவி தமிழ்நாட்டு உங்களை செருப்பை கழட்டி அடிப்பாங்க…! உதயநிதி ஸ்டாலின் அட்டாக்…

ஆர் எஸ் எஸ் ரவி அவர்களே, உங்கள் சித்தாந்தத்தை எங்கள் தமிழ்நாட்டு மக்களிடம் சொல்லுங்கள், செருப்பை கழட்டி அடிப்பாங்க என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

சென்னையில் டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ‘ஹிந்தி மாத’ கொண்டாட்ட விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார். விழாவின் தொடக்கத்தில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ இசைக்கப்பட்டது. அப்போது, அதில் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்னும் வார்த்தை இடம்பெற்ற வரி பாடப்படவில்லை. இதில் ‘திராவிடம்’ என்ற சொல் இடம்பெற்றுள்ளதால் அந்த வரி தவிர்க்கப்பட்டதாக திமுக குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. இந்த விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘கடந்த 50 ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க தொடர் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

இந்தி திணிப்பு என்று கூறி தமிழக மக்களை இந்தி கற்கவிடாமல் தடை செய்திருக்கின்றனர். தமிழ் தமிழ் என்று பேசுபவர்கள் உலகம் முழுவதும் தமிழைக் கொண்டுசெல்ல என்ன செய்தார்கள்? தமிழை வைத்து அரசியல் மட்டுமே செய்கின்றனர். நாட்டில் 23 மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 3-வது மொழி அனுமதிக்கப்படவில்லை. இது ஒரு பிரிவினைவாத நோக்கம். இந்த முயற்சியில் ஈடுபடுபவர்களால் இந்தியாவை பிரிக்க முடியாது. இந்தியாவின் பலமான ஓர் அங்கமாக தமிழகம் எப்போதும் இருக்கும் என கூறினார். ஆளுநரின் இந்த கருத்து சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியது.

இந்த சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பலர் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். மேலும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை உடனடியாகத் திரும்ப பெறவேண்டும் எனக் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது. வரிகளை நீக்கினால் ‘திராவிடம்’ வீழாது!ஒருமைப்பாட்டுக்கு உலைவைக்க நினைக்கும் அவரை, ஒன்றிய அரசு உடனேத் திரும்பப்பெற வேண்டும். ஆர் எஸ் எஸ் ரவி அவர்களே, உங்கள் சித்தாந்தத்தை எங்கள் தமிழ்நாட்டு மக்களிடம் சொல்லுங்கள், செருப்பை கழட்டி அடிப்பாங்க என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

English Summary

RSS Ravi Tamilnadu beat you with sandals

Vignesh

Next Post

வீட்டில் பூஜை அறையில் இந்த தவறை மறந்து கூட செஞ்சிடாதீங்க.. செல்வம் தங்காது..

Sat Oct 19 , 2024
If we do some mistakes in the house pooja room then the poverty will increase in the house and the wealth will not stay and will increase the negative energy.

You May Like