fbpx

”வாழ்ந்தா உங்ககூட தான் வாழணும்”..!! காதலிகளுக்காக மனைவியை கொன்று நாடகம்..!! கணவன் சிக்கியது எப்படி..?

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் திருமணத்தை மீறிய உறவை கண்டறிந்த மனைவியை, காதலிகள் இருவர் உதவியுடன் கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அக்டோபர் 28ஆம் தேதி பிரத்யும்ன குமார் தாஸ் என்பவர் தனது மனைவி சுபாஸ்ரீ தற்கொலைக்கு முயன்றதாகக் கூறி புவனேஸ்வர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், தனது மனைவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக காவல்நிலையத்திலும் புகாரளித்தார். இதை இயற்கைக்கு மாறான மரணம் என போலீசார் வழக்குப் பதிவு செய்து, உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சுபாஸ்ரீயின் கைகள் மற்றும் கழுத்தில் காயங்கள் இருந்தது தெரியவந்தது.

மேலும், அளவுக்கு அதிகமாக மயக்க மருந்தை உட்கொண்டதால் அவர் இறந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து, சந்தேகமடைந்த போலீசார், பிரத்யும்ன குமார் தாஸிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அவர் இறுதியில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும் இரண்டு பெண்களுடன் தொடர்புள்ளதாகவும் கூறினார். அவர்களின் உதவியுடன் தனது மனைவியைக் கொன்றதாக தெரிவித்தார்.

விசாரணையில், தாஸ் இரண்டு பெண்களுடன் திருமணம் தாண்டிய கள்ள உறவு வைத்திருந்தார். இந்த விவகாரம் மனைவிக்கு தெரிந்ததும், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த 8 மாதங்களாக சுபாஸ்ரீ தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். அக்டோபர் 28 அன்று, தாஸ் தனது மனைவி சுபாஸ்ரீயை சமாதானப்படுத்தி தனது தோழி ரோசியின் வீட்டிற்கு வரும்படி கூறினார்.

இதற்கிடையே, தாஸ் மருந்தகத்தில் பணிபுரிந்த அவரது நண்பரிடமிருந்து மயக்க ஊசி மருந்து வாங்கியுள்ளார். சுபாஸ்ரீ ரோசியின் வீட்டிற்கு வந்தபோது, ​​அவர்கள் சுபாஸ்ரீக்கு இரண்டு மயக்க ஊசிகளை வலுக்கட்டாயமாக செலுத்தியுள்ளனர். இதனால் தான் அவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், மனைவி கொலை வழக்கில் கணவரை கைது செய்த போலீசார், அந்த இரண்டு பெண்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : “தமிழர்களுக்கு என்று ஒரு தனி மாநிலம்”..!! போராளிகளின் தியாகங்களை நினைவுக் கூர்ந்த விஜய்..!!

English Summary

Das had extramarital affairs with two women. When the wife came to know about this matter, there was a dispute between the two.

Chella

Next Post

நிலத்திற்கு அடியே வித்தியாசமான நகரம்.. தேவாலயம் முதல் திரையரங்கு வரை அனைத்து வசதிகளும் இருக்கு..!! எங்கே தெரியுமா?

Fri Nov 1 , 2024
A different city under the ground.. From church to cinema there are all facilities..!! Do you know where?

You May Like