உத்தராகணட் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
உத்தராகணட் மாநிலம் பவுரி கார்வால் மாவட்டம் நைனி தண்டாவில் இருந்து புறப்பட்ட ஒரு பஸ், நைனிடால் மாவட்டம் ராம்நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. 40 பேர் பயணிக்கக் கூடிய அந்த பஸ்ஸில் 63 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று காலை 7 மணி அளவில் அந்த பஸ் கீத் ஜாகிர் ஆற்றங்கரையில் அல்மோரா மாவட்டம் கூபி கிராமத்துக்கு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ் அருகில் இருந்த சுமார் 650 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் சிக்கிய பெண்கள், குழந்தைகள் உட்பட 36 பேர் சடலமாக மீட்கப்பட்டதாகவும், படுகாயமடைந்த 27 பேர் ராம்நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். படுகாயமடைந்தவர்களில் 5 பேர் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. உயிரிழந்த நபர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது இறந்த செய்தியை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில்; உத்தராகணட் மாநிலம் அல்மோராவில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான சாலை விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.