fbpx

சற்றுமுன்..! 100 % கட்டாயம்… அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பறந்த அதிரடி உத்தரவு…!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வருகைப் பதிவேடு மற்றும் எமிஸ் இணையதளம் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர் எண்ணிக்கை 100 சதவீதம் சரியாக இருப்பதை, குறுவள மைய அளவில் உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வருகைப் பதிவேடு மற்றும் எமிஸ் இணையதளம் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர் எண்ணிக்கை 100 சதவீதம் சரியாக இருப்பதை, குறுவள மைய அளவில் உறுதி செய்ய வேண்டும். ஏதேனும் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை வருகைப் பதிவேட்டுக்கும், எமிஸ் தளத்தில் உள்ள பதிவுக்கும் வித்தியாசம் இருப்பின், உடனே அதை சரி செய்ய வேண்டும்.

அதேபோல, மாணவர்கள் யாரேனும் நீண்டகால விடுப்பில் இருந்து, வேறு பள்ளிகளில் சேர்ந்திருப்பின், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர், அந்த மாணவர் விவரத்தை எமிஸ் தளத்தில் பொதுப்பகுதிக்கு (Common Pool) அனுப்ப வேண்டும். தமிழக அரசின் நலத் திட்டங்களை வழங்குவதில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு, இவற்றை துரிதமாக செய்து முடிக்க வேண்டும். மேலும், அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும், தங்கள் பள்ளியின் மாணவர் விவரம் எமிஸ் இணையதளத்தில் 100 சதவீதம் சரியாக உள்ளது என சான்றிதழ் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

This must be checked..! An action order issued to all government schools

Vignesh

Next Post

ஐபிஎல் மெகா ஏலம் 2025!. 1,574 வீரர்கள் பங்கேற்பு!. பிசிசிஐ வெளியிட்டுள்ள அப்டேட்!

Wed Nov 6 , 2024
IPL Mega Auction 2025!. 1,574 players participated!. Update released by BCCI!

You May Like