குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப், ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸை மிகப்பெரிய வெற்றியில் தோற்கடித்துள்ளார், அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. அந்த நாட்டின் 50 மாகாணங்களிலும் நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. தற்போதைய அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் போட்டியிடுகின்றனர்.
அமெரிக்காவில் ஜனாதிபதியை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுப்பதில்லை. தேர்வுக் குழு உறுப்பினர்கள் எனப்படும் எலெக்ட்ரோல் காலேஜ் முறைப்படி தான் வாக்குப்பதிவு நடக்கிறது. மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 தேர்வுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில், 270 பேரின் ஆதரவை யார் பெறுகிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள். ஆரம்பம் முதலே இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.
இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு 2-வது முறையாக அதிபராக பதவியேற்க உள்ளார் டிரம்ப். பெரும்பான்மைக்கு 270 எலெக்ட்ரோல் காலேஜ் வாக்குகள் தேவைப்படும் நிலையில், 277 வாக்குகளை உறுதி செய்து டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். டிரம்ப் இதன் மூலம் கிட்டத்தட்ட 300 மாகாணங்களை வென்று ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
Read more ; LMV ஓட்டுநர் உரிமம் உள்ளவர் 7,500 கிலோ வரை எடை கொண்ட வாகனத்தை ஓட்டலாம்..!! – உச்ச நீதிமன்றம்