fbpx

ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கு அஞ்சல் துறை சூப்பர் அறிவிப்பு…! நவம்பர் 30 வரை வீடு தேடி சான்றிதழ்…

இந்திய அஞ்சலக வங்கியும், ஓய்வூதியர்கள் நலத்துறை அமைச்சகமும் இணைந்து 2024 நவம்பர் 1 முதல் நவம்பர் 30 வரை நாடு தழுவிய டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் (DLC 3.0) இயக்கத்தை நாடு முழுவதும் உள்ள 800 பெரிய மற்றும் சிறிய நகரங்களில் நடத்தி வருகிறது.

இந்தியாவில் டிஜிட்டல் முறையிலான முக அங்கீகார மற்றும் கைவிரல் ரேகை பதிவு ஆகியவற்றின் மூலம் தொலைதூர பகுதிகளில் உள்ள ஓய்வூதியர்கள் உட்பட அனைத்து ஓய்வூதியர்களுக்கும் இந்த வசதியை அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கமாகும். அவர்கள் வசிக்கும் இடங்களிலோ, அருகில் உள்ள டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் முகாம்களிலோ எளிமையாக இந்த வசதியை இதன் மூலம் பெற முடியும்.

இதன் ஒருபகுதியாக ஓய்வூதியம், ஓய்வூதியர்கள் நலத்துறை, இந்திய அஞ்சலக வங்கியுடன் இணைந்து செயல்படுகிறது. அனைத்து ஓய்வூதியர்களும் முக்கியமாக கிராமங்களில் உள்ள ஓய்வூதியர்கள் சிரமமின்றி தபால்காரர் மூலம் தங்களின் வீட்டிலேயோ அல்லது அருகில் உள்ள டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் முகாம்களிலோ, முக அங்கீகாரம் அல்லது கைவிரல் ரேகை பதிவு மூலம் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.

இது குறித்து அஞ்சல் துறை, சென்னை மத்திய கோட்ட கண்காணிப்பாளர், கூறியதாவது; இந்த இயக்கம், ஓய்வூதியர்கள் நலத்துறை, தனித்துவ அடையாள அட்டை ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது என்றார். இந்திய அஞ்சலக வங்கி இல்லம் தேடி வங்கி சேவை மூலம் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பித்தல் சேவையை வழங்கி வருகிறது என்று அவர் குறிப்பிட்டார். இந்த சேவைக்கு கட்டணமாக ரூபாய் 70 மட்டும் வசூலிக்கப்படுகிறது.

இந்த டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சேவையை பெறவிரும்பும் ஓய்வூதியர்கள் அருகில் உள்ள அஞ்சலகம் அல்லது தங்கள் பகுதி தபால்காரரை தொடர்பு கொள்ளலாம் என்றும் மேலும் https://ccc.cept.gov.in/ServiceRequest/request.aspx என்ற இணையதள முகவரி மூலம் அல்லது “Postinfo” செயலியை பதிவிறக்கம் செய்து சேவை கோரிக்கையை பதிவுசெய்யலாம். மத்திய அரசு ஓய்வூதியர்கள் மட்டுமன்றி தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள், மாநில அரசு ஓய்வூதியர்கள், ராணுவ ஓய்வூதியர்கள், இதர ஓய்வூதியர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி, வீட்டில் இருந்த படியே தங்கள் பகுதி தபால்காரரிடம் கைவிரல் ரேகைபதிவு, முக அங்கீகாரம் ஆகியவற்றின் மூலம் ஆயுள் சான்றிதழை சமர்ப்பித்து பயன் பெறுமாறு அஞ்சல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

English Summary

Department of Posts Super Notification for Pensioners

Vignesh

Next Post

Vastu Tips : இந்த செடிகள், மரங்கள் உங்கள் வீட்டில் இருந்தால் குடும்பத்தில் பிரச்சனை தான் வரும்..!!

Thu Nov 7 , 2024
Don't just grow these plants and trees at home

You May Like