fbpx

கங்கை நதிக்கரையில் காதலனை கரம் பிடித்த ரம்யா பாண்டியன்..!! காதல் மலர்ந்தது எப்படி?

கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான டம்மி டப்பாஸ் என்ற திரைப்படத்தில் சௌமியா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரம்யா பாண்டியன். அதன் பிறகு ஜோக்கர், ஆண் தேவதை, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், நண்பகல் நேரத்து மயக்கம், இடும்பன் காரி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதனைத்தொடர்ந்து பிக்பாஸில் சீசன் 4 இல் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த சீசனில் கலந்து கொண்ட அவர் இறுதிப் போட்டி வரை முன்னேறினார்.   மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஓளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியும் இவருக்கு ரசிகர்களிடம் பரவலான அங்கீகாரத்தைப் பெற்று தந்தது. 

கடந்த 2023 ஆம் ஆண்டு ரவி ஷங்கர் ஆசிரமத்தில் யோகா பயிற்சி மையத்தில் ரம்யா பாண்டியன் இணைந்தார். இந்த ஆசிரமத்தில் அவரது பயிற்சியாளராக வந்தவர் தான் லொவல் தவான். இருவருக்கும் பார்த்த உடனே பிடித்து காதலில் விழுந்ததாகவும் தங்கள் குடும்பத்தினர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் சமீபத்தில் தகவல்கள்  வெளியாகின. பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட லவல் தவான் ஒரு பிரபல யோகா பயிற்சியாளர். இது தவிர்த்து ஒரு தொழிலதிபரும் கூட.

அதே நேரம் திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்டவர் ரம்யா பாண்டியன். இருவருக்கும் இன்று ரிஷிகேஷில் சிவபுரி கங்கை நதிக்கரையில் திருமணம் நடைபெற்றது.  இந்த ஃபங்ஷனில் அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. திருமணம் ரிஷிகேஷில் நடைபெற்றாலும் வரும் நவம்பர் 15 ஆம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read more ; பாம்புகளால் பாதுகாக்கப்படும் கோயில்.. அதுவும் நடுக்கடலில்..!! பின்னணியில் இப்படி ஒரு வரலாறு இருக்கா?

English Summary

Ramya Pandyan holds her boyfriend’s hand on the banks of Ganga river

Next Post

அடுத்த 48 மணி நேரத்திற்குள் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! தமிழ்நாட்டில் மழை எப்படி இருக்கும்..?

Fri Nov 8 , 2024
The prevailing air circulation over Southwest Bay of Bengal will turn into a low pressure area during the next 48 hours.

You May Like