fbpx

பெற்றோர்களே உஷார்..!! இதை சாதரணமா நினைக்காதீங்க..!! 2 குழந்தைகள் பரிதாப பலி..!! குடும்பத்திற்கே நேர்ந்த சோகம்..!!

சென்னை குன்றத்தூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை ஸ்வாசித்ததால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணஞ்சேரியைச் சேர்ந்த 34 வயது கிரிதரன் என்பவர் தனியார் வங்கியில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், இவரது மனைவி பவித்ராவுக்கும் விஷாலினி (6 வயது) மற்றும் சாய் சுதர்சன் (4 வயது) ஆகிய இரண்டு குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில், இவர்களது வீட்டில் அடிக்கடி எலி தொல்லை இருந்துள்ளது. இதனால் அவர் எலி மருந்து, எலி பேஸ்ட் ஆகியவற்றை அதிகமாகப் பயன்படுத்தி வந்துள்ளார். இப்படி இருக்கையில், வீட்டில் எலி மருந்து வைத்த நிலையில் அந்த மருந்தின் நெடி வீடு முழுவதும் பரவியுள்ளது. இதைச் சுவாசித்த கிரிதரன் உட்பட அக்குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கும் சில மணி நேரங்களில் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, 4 பேரும் உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், கிரிதரனின் குழந்தைகளான ஷாலினி மற்றும் சுதர்சன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், கிரிதரன் மற்றும் பவித்திரா இருவரும் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். வீட்டில் ஏ.சி. உபயோகப்படுத்தியதால் எலியைப் பிடிக்க வைத்திருந்த மருந்தின் நெடி பரவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : மாணவர்களே இந்த நம்பருக்கு உடனே கால் பண்ணுங்க..!! உங்கள பத்தி நாங்க யார்கிட்டயும் சொல்ல மாட்டோம்..!! அமைச்சர் சொன்னதை கவனிச்சீங்களா..?

English Summary

The death of 2 young children after inhaling the rat poison due to health problems has caused a great tragedy.

Chella

Next Post

நீதிமன்றத்தின் பரபரப்பு உத்தரவால் தலைமறைவான நடிகை கஸ்தூரி..? வலைவீசி தேடும் போலீஸ்..!!

Fri Nov 15 , 2024
While actress Kasthuri filed a petition seeking anticipatory bail in the case of her controversial speech about Telugu people, Judge Anand Venkatesh dismissed the petition.

You May Like