fbpx

பெண்கள் தான் தாலி கட்டிக்கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை..!! – உதயநிதி

சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தங்கம் மாளிகையில், எளியோர் எழுச்சி நாள் எனும் பெயரில் 48 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் 48 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார்.

மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் துணை முதல்வர் உதயநிதி. 48 ஜோடிகளுக்கும் கட்டில், மெத்தை, பீரோ, மிக்சி என 30க்கும் மேற்பட்ட சீர்வரிசை பொருட்கள் மற்றும் ரூபாய் 25,000 ரொக்கம் வழங்கி மண வாழ்க்கை சிறப்பாக வாழ்த்தினார் துணை முதல்வர் உதயநிதி.

அப்போது சூர்யகுமார் – குணவதி ஜோடிக்கு துணை முதல்வர் உதயநிதி தாலி எடுத்துக் கொடுத்தார். தாலியை எடுத்து மணமகளின் தாயிடம் கொடுத்தார் உதயநிதி. பதற்றத்தில் இருந்த தாய், தானே தாலியை வாங்கி மணமகள் கழுத்தில் கட்டப் போனார். இதைப் பார்த்து ஷாக் ஆன உதயநிதி, “என்னம்மா நீங்க கட்டப்போறீங்க.. மாப்ளைக்கிட்ட கொடுங்க” என சிரித்தபடி கூறினார். உடனே நிலைமையை உணர்ந்த தாய், மணமகனிடம் தாலியை கொடுத்து கட்டச் செய்தார். இந்த நிகழ்வால் அங்கு சிரிப்பலை ஏற்பட்டது. மேடையில் இருந்த அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரும் இந்த நிகழ்வைக் கண்டு சிரித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலகலப்பாகப் பேசினார். உதயநிதி பேசுகையில், “இங்கு நடைபெற்றுள்ள சில திருமணங்கள் காதல் திருமணங்கள் என்று சொன்னார்கள். இதற்காகவே ஆர்டி சேகர் அண்ணனை பாராட்ட வேண்டும். சரி காதல் பண்ணிட்டீங்க.. திருமணத்தை சிறப்பாக நடத்தி வைத்துவிட்டோம். இனிமேல் தான் நீங்கள் அதிகமாக காதலிக்க வேண்டும். ஒவ்வொருவரும் விட்டுக்கொடுத்து, நண்பர்களாக இருந்து வாழ வேண்டும்.

ஒரு மணமகன் 5 முடிச்சுகளைப் போட்டார். “என்னப்பா கட்டிக்கிட்டே இருக்க..?” எனக் கேட்டேன். ஸ்ட்ராங்கா கட்டடணும்ணே என்றார். திருமண பதற்றத்திலா, அவசரத்திலா எனத் தெரியவில்லை. இங்கு ஒரு சில மணமகன்கள் தனக்குத்தானே மாலை போட்டுக் கொண்டார்கள். ஒரு மணமகன் தனக்கு தானே தாலி கட்டிக் கொள்ள முயற்சி செய்தார். இது தவறு கிடையாது. பெண்கள் தான் தாலி கட்டிக்கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை. பெரியார் சொன்னதுதான்” என்று கலகலப்பாகப் பேசினார் உதயநிதி ஸ்டாலின்.

Read more ; எச்சரிக்கை.. செயற்கை இனிப்புகள் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வருமாம்..!! – மருத்துவர்கள் எச்சரிக்கை

English Summary

It is not necessary for women to tie thali..!! – Udayanidhi

Next Post

சென்னைக்கு ஒரு வாரம் பிரேக்.. இந்த மாவட்டங்களில் மழை பிச்சு உதறபோகுது..!! - வெதர்மேன் அலர்ட்

Sun Nov 17 , 2024
Chennai, Kanchipuram, Thiruvallur, Chengalpattu districts will start raining again after 9 days according to Tamil Nadu Weatherman.

You May Like