fbpx

கர்பமாக்கிவிட்டு காணாமல் போன காதலன்; குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த தாய்..

அஸ்ஸாமை சேர்ந்தவர் சர்புதீன். இவரது 22 வயது மகள் ஷகினாபேகம், ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். விடுதியில் தங்கி வேலை செய்து வரும் இவர், அசாமில் இருந்தபோது ​​25 வயதான சுமன் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். ஷகினா பேகம் சென்னை வந்த போது, ​​சுமனும் இங்கு வேலை பார்த்து வந்துள்ளார். இருவரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் சுமன், ஷகினா பேகத்தை திருமணம் செய்து கொள்வேன் என்று ஆசை வார்த்தைகளை பேசி, அவருடன் நெருங்கி பழகியுள்ளார்.

இருவரும் நெருங்கி பழகியதில், ஷகினா பேகம் கர்ப்பமாகியுள்ளார். இதனால் ஷகினா பேகம் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். சில நாட்கள் ஷகினா பேகத்தை தட்டி கழித்து வந்த சுமன், ஒரு கட்டத்தில் ஷகினா பேகத்திடம் பேசுவதை நிறுத்தி விட்டார். மேலும், சுமன் திடீரென மாயமாகியுள்ளார். ஷகினா பேகம் பலமுறை சுமனுக்கு போன் செய்தும் அவர் எடுக்கவில்லை. இதனால் ஷகினா பேகம் அசாமிர்க்கு சென்று பல இடங்களில் தேடியுள்ளார். ஆனால் அவர் எங்கு தேடியும் கிடைக்காததால், ஷகினாபேகம் மீண்டும் அவரது விடுதிக்கு வந்து விட்டார்.

ஹாஸ்டலில் உள்ளவர்கள் கர்ப்பம் குறித்து கேட்கும் போதெல்லாம், ‘நான் விரைவில் என் காதலனை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்’ என்று ஷகினா பேகம் சமாளித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று வேலைக்கு செல்லாமல் ஹாஸ்டலில் இருந்த ஷகினா பேகத்திற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. விடுதியில் யாரும் இல்லாததால், தனி அறையில் கதறி அழுத அவர், சிறிது நேரத்தில் அவராகவே பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அவருக்கு கடும் ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவர் மயங்கி விழுந்துள்ளார்.

பின்னர், சிறிது நேரத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டு ஷகினா பேகம் எழுந்தார். அப்போது அவரது அறை முழுவதும் ரத்தக்கறை இருந்துள்ளது. மேலும், அறையில் அழுது கொண்டிருக்கும் குழந்தையை என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த அவர், குழந்தையை விடுதியின் பின்புறமுள்ள குளத்தில் வீசியுள்ளார். இதில் குழந்தை தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி இறந்தது. பின்னர், மாலையில் விடுதிக்கு வந்த அவரது தோழிகளிடம் அவர் நடந்ததை எல்லாம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள் உடனடியாக குளத்துக்குச் சென்று தூக்கி வீசப்பட்ட சிசுவை மீட்டனர். பின்னர் தாயும் சேயும் ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தகவலின் பேரில் செங்கல்பட்டு தாலுகா போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர், ஷகினா பேகத்திடம் புகார் பெறப்பட்டு, அவரது விருப்பப்படி செங்கல்பட்டில் உள்ள நவாப் ஜாமியா மசூதியில் குழந்தையின் உடல் தகனம் செய்யப்பட்டது. மேலும், திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி கர்ப்பமாக்கிய காதலனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Read more: நீச்சல் குளத்தில் கிடந்த 3 பெண்களின் சடலம்.. போலீசார் விடுத்த எச்சரிக்கை!!!

English Summary

new-born-baby-was-murdered-by-her-own-mother

Next Post

அதிக நேரம் செல்போனில் ரீல்ஸ் பார்த்த மகன்; பேட்டால் அடித்து கொடூர கொலை செய்த தந்தை...

Sun Nov 17 , 2024
father-killed-his-son-for-watching-mobile

You May Like