fbpx

TNSTC பேருந்துகளில் 90 நாட்களுக்கு முன்பே டிக்கெட் புக்கிங் செய்யலாம்.. இன்று முதல் புதிய விதி அமல்..!!

தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் தற்போது 60 நாட்களுக்கு முன்பு மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்ற நிலை மாறி, 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து கழகம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், “பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தங்களது பயணத்திற்கு தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் இணையதளம் மற்றும் செயலி மூலம் முன்பதிவு செய்து சிரமமின்றி பயணம் செய்து கொள்ளலாம்..

வழக்கமாக தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளின்போது, அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.. அந்தவகையில், வரும் ஜனவரி 14ல் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.. இதையொட்டி சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் லட்சக்கணக்கானோர், சொந்த ஊருக்கு செல்லக்கூடும்.. அரசு விரைவு பஸ்களில் 2 மாதங்களுக்கு முன்புதான், முன்பதிவு செய்ய முடியும். ஆனால், இப்போது 90 நாட்களுக்கு முன்னரே, முன்பதிவு செய்யும் வசதி அமலாகியுள்ளது.

இதனால், பயணியர் முன்கூட்டியே திட்டமிட்டு பயணிக்க முடியும். கூடுதல் பஸ்களை இயக்க, நிர்வாகத்துக்கும் வசதியாக இருக்கும். தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணியர், ஆர்வமாக டிக்கெட் முன்பதிவு செய்து வருகிறார்கள். வரும் ஜனவரி முதல் வாரத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கும் தேதி வெளியிடப்படும். நெரிசலை தவிர்க்க, அரசு போக்குவரத்து கழகwww.tnstc.in இணையதளம் அல்லது, டிஎன்எஸ்டிசி செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளனர்.

Read more ; மாரடைப்பு Vs கார்டியாக் அரெஸ்ட் | இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? – மருத்துவர் விளக்கம்

English Summary

It has been announced that Tamil Nadu Government Transport Corporation buses can now be booked only 60 days in advance, and reservations can be made 90 days in advance.

Next Post

Gold Rate | தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிரடி உயர்வு..!! இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!!

Tue Nov 19 , 2024
In Chennai today, the price of gold jewelry has increased by Rs. 560 per sovereign, and one sovereign of gold is being sold for Rs. 56,520.

You May Like