fbpx

தக்காளி கிராண்ட் சேலஞ்ச்… மத்திய அரசு சார்பில் நிதியுதவி…! முழு விவரம்

மாபெரும் தக்காளி சவால்’: 28 கண்டுபிடிப்பாளர்களுக்கு மத்திய அரசு சார்பில் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறையானது, கல்வி அமைச்சகத்தின் கண்டுபிடிப்பு பிரிவுடன் இணைந்து, தக்காளி மதிப்புச் சங்கிலியின் பல்வேறு நிலைகளில் புதுமையான யோசனைகளை வரவேற்கும் வகையில், மாபெரும் தக்காளி சவால் (தக்காளி கிராண்ட் சேலஞ்ச்(TGC) என்ற ஹேக்கத்தானை தொடங்கியுள்ளது. 30.06.2023 அன்று தொடங்கப்பட்ட மாபெரும் தக்காளி சவால் மாணவர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள், ஆசிரியர்கள், தொழில்துறை நபுணர்கள், ஸ்டார்ட் அப்கள் மற்றும் தொழில் வல்லுநர்களிடமிருந்து உற்சாகமான வரவேற்பைப் பெற்றது.

இந்தியா முழுவதும் உள்ள கண்டுபிடிப்பாளர்களிடமிருந்து மொத்தம் 1,376 யோசனைகள் பெறப்பட்டன. கடுமையான சுற்று மதிப்பீட்டிற்குப் பிறகு, முன்மாதிரி உருவாக்கம் மற்றும் வழிகாட்டுதலுக்காக, 28 யோசனைகளுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் நிதி கரே செய்தியாளர் சந்திப்பின்போது கூறினார்.

உலகளவில் தக்காளி உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியா, ஆண்டுதோறும் 20 மில்லியன் மெட்ரிக் டன் தக்காளி உற்பத்தி செய்கிறது. இருப்பினும், அதிக மழை அல்லது திடீர் வெப்பம் போன்ற பாதகமான வானிலை நிலைமைகள், உற்பத்தி மற்றும் இருப்பை பாதிக்கின்றன. இதன் விளைவாக, அதிக விலை ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகின்றன. இந்த சவால்கள் விவசாயிகளின் வருமானத்தை நேரடியாக பாதிக்கின்றன, விநியோகச் சங்கிலிகளை சீர்குலைப்பதுடன், குறிப்பிடத்தக்க விரயத்திற்கு வழிவகுக்கின்றன. தக்காளி கிராண்ட் சேலஞ்ச் (TGC) இந்த முக்கியமான பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கும், தக்காளி விநியோக சங்கிலியை உறுதிப்படுத்துவதற்கும் புதுமையான மற்றும் அளவிடக்கூடிய தீர்வுகளைக் கண்டறிய தொடங்கப்பட்டுள்ளது.

தக்காளி உற்பத்தி, பதப்படுத்துதல் மற்றும் விநியோகம் ஆகியவற்றில் உள்ள முறையான சவால்களை எதிர்கொள்ள இந்தியாவின் இளம் கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் திறமையைப் பயன்படுத்துவதை இந்த கிராண்ட் சேலஞ்ச் நோக்கமாகக் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Centre provides funding to 28 innovators of ‘Tomato Grand Challenge’

Vignesh

Next Post

இரு மாநிலங்களிலும் முன்னிலையில் "பாஜக கூட்டணி"…! தற்போதைய நிலவரம் என்ன..!

Sat Nov 23 , 2024
"BJP alliance" ahead in both states...! What is the current situation..!

You May Like