fbpx

“காசுக்காக நீ அவன்கூட படுக்கணும்” கட்டாயப்படுத்திய கணவன்; மறுப்பு தெரிவித்த மருமகளை கடத்தி சென்று, மாமியார் செய்த காரியம்..

கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்தவர் செஜா கேத்தரின். இவருக்கும் உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்ற நபர் ஒருவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் முடிந்துள்ளது. செஜா கேத்தரின் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். இதனை அடிக்கடி சுட்டிக்காண்பிக்கும் உதயகுமாரின் குடும்பத்தார், அவர்களுக்குத் தெரிந்த ரியல் எஸ்டேட் அதிபர் வேலுச்சாமி என்பவருடன் பாலியல் ரீதியாக ஒத்துழைப்பு தர வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த செஜா கேத்தரின், பாலியல் ரீதியாக ஒத்துழைப்பு தர மாட்டேன் என்று கூறி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாமியார் சுமதி, மருமகளை காரில் கடத்தி தொழிலதிபர் கெஸ்ட் ஹவுஸில் கட்டாயப்படுத்தி பாலியல் தொடர்பு வைத்துக்கொள்ள முயற்சித்துள்ளார்.

இதில் இருந்து தப்பித்த கேத்தரின், சம்பவம் குறித்து அவரது கணவர் மற்றும் அவரது மாமனார் ஞானசேகரிடம் கூறி அழுதுள்ளார். ஆனால் அப்போது தான் அவர்களும் இவ்விவகாரத்தில் உடந்தையாக செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் வீட்டை விட்டுச் சென்ற கேத்தரின், உடுமலைப்பேட்டை காவல் நிலையம் மற்றும் துணை மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோரிடம் இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளார். ஆனால், யாரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் காவல்துறை தரப்பில் உடனடியாக தன்னை இந்நிலைக்கு ஆளாக்கிய தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளார்.

Read more: பாஜக மாபெரும் வெற்றி..!! அடுத்த முதல்வர் யார்..? மகாராஷ்டிராவில் நீடிக்கும் குழப்பம்..!!

English Summary

woman-was-forced-to-have-relationship-with-a-stranger

Next Post

மத்திய அரசின் இலவச கேஸ் சிலிண்டர் உங்களுக்கும் வேண்டுமா..? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? மிஸ் பண்ணிடாதீங்க..!!

Sat Nov 23 , 2024
Pradhan Mantri Ujjwala Yojana (PMUY) is a central government scheme that provides free LPG connections to poor families.

You May Like