fbpx

பாமாயில் கொண்டு தயாரிக்கும் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க..! உயிருக்கே ஆபத்து..

சமையலுக்கு பயன்படுத்தப்படும் மிக முக்கியமான எண்ணெய்களில் பாமாயிலும் ஒன்று. குறிப்பாக பல நூற்றாண்டுகளாக மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் சமையல் எண்ணெயாக பயன்படுத்தப்பட்டது. மலேசியா, இந்தோனேசியா மற்றும் பல ஆப்பரிக்க நாடுகள் பாமாயில் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது.

குறைந்த விலை காரணமாக, இந்திய சந்தையில் பாமாயில் பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்டு, பல்வேறு பதப்படுத்தப்பட்ட எண்ணெய்களுடன் கலந்து விற்கப்படுகிறது. பெரும்பாலான தொகுக்கப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களில் பாமாயிலின் கலவை உள்ளது, இது உடல்நல அபாயங்களை அதிகரிக்கலாம். அதிலும் பாமாயிலில் செய்யப்பட்ட இனிப்புகளை உண்பதால் பல உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுகிறது. அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..

குலோப் ஜாமுன்: அனைவருக்கும் பிடித்த இந்த இனிப்பு வகையில் பால் திடப்பொருட்கள் சர்க்கரை மற்றும் பாமாயில் கொண்டு தயாரிக்கப்படுகிறது. பாமாயிலில் உள்ள அதிக கொழுப்பு கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து எடையைக் கூட்டும்.

ஜிலேபி: கண்களைப் பறிக்கும் ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும் ஜிலேபிகள் பெரும்பாலும் பாமாயிலில் ஆழமாக வறுக்கப்படுகிறது. இது அதிக கலோரி மற்றும் அதிக கொழுப்புள்ள பண்டம்.

காஜு கத்லி: குழந்தைகளுக்கு மிக விருப்பமானது. முந்திரி கொண்டு, பெரும்பாலும் பாமாயிலில் தயாரிக்கப்படுகிறது. இதிலுள்ள அதிக கொழுப்பு இதய நோய்க்கு வித்திடும்.

பால் பேடா: இது பால் பொருட்கள், சர்க்கரை மற்றும் பாமாயில் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

அல்வா: கோதுமை மாவிலிருந்து தயாரிக்கப்படும் பிரபலமான இந்திய இனிப்பு வகையான இது பெரும்பாலும் பாமாயிலில் தயாராகிறது.

மைசூர் பாக்: பிரபலமான தென்னிந்திய இனிப்பு வகைகளில் ஒன்று. கடலை மாவு, சர்க்கரை மற்றும் பாமாயிலில் தயாராகும் இனிப்புப் பண்டம்.

பாமாயிலில் செய்த இனிப்புகளை உண்ணுவதால் ஏற்படும் உடல்நலக் கேடுகள்:

* பாமாயிலில் நிறைவுற்ற கொழுப்புகள் அதிகம் உள்ளது. இது எல்.டி.எல் அதாவது கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கும். இது இதய நோய்க்கு வித்திடும்.

* அதிக கலோரி மற்றும் கொழுப்பு காரணமாக, உடல் பருமனும், இன்சுலின் எதிர்ப்பிற்கும் வழிவகுக்கும். இது டைப் டு நீரிழிவு நோயை உருவாக்கும்.

* பாமாயிலில் அதிக அளவு ஒலிக் அமிலம் உள்ளது. இது உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும். நாள்பட்ட வீக்கம், கீல்வாதம், மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு உடல்நல பிரச்னைகளுக்கு வித்திடும்.

* பாமாயிலில் செய்யப்படும் இனிப்புகளை உண்பதால் உடலில் வாயு அதிகரிக்கும். வயிற்று அசௌகரியம், வயிறு வீங்குதல், செரிமான கோளாறுகள் ஏற்படும்.

* பாமாயிலில் காமா- லினோலெனிக் அமிலம் என்ற கலவை உள்ளது. இதை அதிக அளவில் உட்கொள்ளும்போது மார்பகப் புற்றுநோயின் அபாயத்தை ஏற்படுத்தும். மேலும், இதில் உள்ள நிறைவுற்ற கொழுப்புகள் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்திற்கும் வழி வகுக்கும்.

Read more ; மாதவிடாய் கால ஒற்றைத் தலைவலி.. என்ன காரணம்..? எப்படி சரி செய்வது..?

English Summary

Do not eat these foods made with palm oil..! Danger to life.

Next Post

GIC Recruitment 2024 : மத்திய அரசில் வேலை.. ரூ.50 ஆயிரம் முதல் சம்பளம்..!! விண்ணப்பிக்க ரெடியா?

Fri Dec 6 , 2024
General Insurance Corporation of India (GIC) has announced the recruitment of Assistant Managers

You May Like