fbpx

இளமைப் பருவ காதல்!. 100 வயதை கடந்து திருமணம்!. கின்னஸ் சாதனை படைத்த மூத்த புதுமண தம்பதி!.

Guinness World Record: அமெரிக்காவில் 100 வயதை கடந்த தம்பதிகள் திருமணம் செய்துகொண்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர்.

அமெரிக்காவில் பெர்னி லிட்மேன்(102), மார்ஜோரி பிடர்மேன்(100) என்ற இந்த தம்பதியினர் தற்போது 202 வயது மற்றும் 271 நாட்களுடன் பிலடெல்பியாவில் உள்ள அவர்களது வீட்டில் கடந்த 3-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடி 9 ஆண்டுகளாக உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் தங்கள் இளமை பருவத்தில் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ஒன்றாக படித்துள்ளனர்.

பின்னர் இருவரும் குடும்பத்தோடு தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். இவர்களின் துணை இறந்த பிறகு பென்சில்வேனியாவுக்கு குடிபெயர்ந்தனர். அங்கு முதியோர் இல்லத்தில் இல்லத்தில் எதேச்சையாக சந்தித்த பிறகு இருவரும் நெருக்கமாகினர். பெர்னி என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மார்ஜோரி ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார். இருவரும் மீண்டும் சந்தித்த போது காதல் மலர்ந்துள்ளது. இதையறிந்த குடும்பத்தினர் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதுகுறித்து பெர்னியின் பேத்தி சாரா சிசர்மென் கூறுகையில், இருவரின் நகைச்சுவை உணர்வும், புத்திசாலித்தனமும் தான் அவர்களின் பிணைப்பின் அடித்தளமாக இருந்தது என்றார்.

Readmore: விவசாயிகளே!. பிஎம் கிசான் நிதி ரூ.12,000 ஆக உயருகிறதாம்?. நிதி அமைச்சர் ஆலோசனை!

Kokila

Next Post

விமானத்தில் உடலுறவில் ஈடுபட்ட காதல் ஜோடி!. வைரலாகும் வீடியோ!. சர்ச்சைக்குள்ளான சுவிஸ் ஏர்லைன்ஸ்!

Sun Dec 8 , 2024
Swiss Airlines: பாங்காக்கில் இருந்து சூரிச் செல்லும் சுவிஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் (எல்எக்ஸ் 181) தம்பதியினர் உடலுறவு கொள்ளும் வீடியோ வைரலாக பரவியது. இந்த வீடியோவை விமானக் குழுவினர் பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர், அதன் பிறகு விமான நிறுவனம் மற்றும் பணியாளர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றனர். முதல் வகுப்பு இருக்கைகளில் இருந்து எழுந்த பின் காக்பிட் அருகே உள்ள முன்னோக்கி கேலியில் இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் […]

You May Like