அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், நடைபெற்று வருகிறது. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில், 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் 3,500 அதிமுக நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளதாகவும், மேலும் சிலர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், அதிமுக வாட்ஸ் ஆப் சேனலில் கட்சி தொண்டர்கள் இணைய வலியுறுத்தினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்தால் சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் என கூறினார்கள்.. ஆனால் இப்போது சட்டப்பேரவையில் அதிமுக-வினர் பேசுவதை நேரலையில் காட்டுவதில்லை.. மக்களுக்கு அது எப்படி புரியும்.. சட்டப்பேரவையில் கேட்கப்படு கேள்விகள் நேரலையில் ஒளி பரப்பு செய்ய வேண்டும்.. அதற்கான பதிலும் நேரலையில் ஒளிபரப்பு செய்ய வேண்டும். டங்க்ஸ்டன் சுரங்கம் பற்றி சட்டப்பேரவையில் பேசியது நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஒரு நாள் ஒளிபரப்பு செய்யப்பட்டதற்கே ஸ்டாலின் ஆடி போய்விட்டார்.. நான் பேசியதை கட் செய்யாமல் ஒளிபரப்பு செய்திருந்தால் திமுக அரசே இப்போது இருந்திருக்காது.. என பேசினார்.
Read more ; இந்தியாவில் பச்ச பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த ஒரே கட்சி திமுக தான்..!! – இபிஎஸ் காட்டம்