தற்போது உள்ள காலகட்டத்தில், பெரியவர்கள் சிறியவர்கள் என கண்ணாடி அணியாதவர்கள் யாருமே இருப்பதில்லை. அந்த வகையில், நாம் பெரும்பாலும் உடலுக்கு காட்டும் அக்கறையை நமது கண்களின் ஆரோக்கியத்திற்கு காட்டுவதில்லை. ஆம், நமது கண்களை பராமரிப்பதற்காகவே ஒரு சில பிரத்தியேக வழிமுறைகள் உள்ளது. இந்த வழிமுறைகளை நாம் தொடர்ந்து செய்வதால், நமது கண்கள் ஆரோக்கியமாக இருக்கும். அதற்க்கு பிறகு நீங்கள் கண்ணாடி அணிய வேண்டிய அவசியமே இல்லை.
ந்த வகையில், உங்கள் கண்களின் ஆரோக்கியத்திற்கு நீங்கள் செய்ய வேண்டியது, வாரத்திற்கு ஒரு முறையாவது கட்டாயம் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். நமது முன்னோர் பொதுவாகவே நல்லெண்ணெய் தேய்த்து குளித்து விடுவார்கள். இதனால் அவர்களின் உடல் மட்டுமின்றி அவர்களின் கண்களும் ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் நாம் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதை அநாகரிகமாக கருதுகிறோம். இது முற்றிலும் தவறு. இதனால் உங்களின் கண்கள் கடுமையாக பாதிக்கப்படும். இதற்க்கு நீங்கள், தேங்காய் எண்ணெய்யை லேசாக சூடுபடுத்தி, தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளிக்கலாம். இதனால், உடல் சூடு தணிவதால் உங்கள் கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
நமது கண்களை முற்றிலும் பாதிக்கும் பழக்கம் என்றால், அது காலை எழுந்தவுடன் செல்போன் பார்ப்பது தான். தூங்கி எழுந்ததும் உடனடியாக படுக்கையில் இருந்தே செல்போனில் நேரத்தை செலவிடுவதால் கட்டாயம் கண்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். இதற்க்கு பதில், நீங்கள் காலையில் எழுந்ததும் குளிர்ந்த நீரில் உங்கள் முகத்தை நன்றாக கழுவ வேண்டும். இதனால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சி கிடைக்கும். இதன் விளைவாக கண்களும் ஆரோக்கியமாக இருக்கும்.
உடலுக்கு பயிற்சி கொடுப்பது போல், நாம் கண்களுக்கும் தினசரி சில பயிற்சிகளை கொடுக்க வேண்டியது அவசியம். இதற்க்கு நீங்கள் பல மணிநேரம் செலவு செய்ய வேண்டாம். ஒரு சில நிமிடங்கள் போதும். இதற்க்கு முதலில் நீங்கள், கண்களை மேலும், கீழுமாக நன்றாக அசைக்க வேண்டும். அவ்வளவு தான், இந்த பயிற்சி ஒன்றே உங்கள் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும், உங்கள் மோதிர விரல்களை கொண்டு புருவங்களுக்கு மேல் இருந்து கீழ்ப்புறமாக தேய்த்து விட வேண்டும். இதை நீங்கள் தினமும் தூங்க செல்வதற்கு முன் 4 அல்லது 5 முறை செய்தால் உங்கள் கண்களுக்கு தேவையான சீரான இரத்த ஓட்டம் கிடைத்துவிடும்.
Read more: வெல்லம் நல்லது தான், ஆனால் இப்படி பயன்படுத்தினால் பெரும் ஆபத்து!!!