நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த ஒவ்வொரு பழக்கவழக்கங்களும் பின் ஒவ்வொரு காரணம் இருக்கும். அதே போல் வீட்டில் வளர்த்த தாவரங்களுக்கும் ஒவ்வொரு காரணம் உண்டு.
வீட்டில் பெண்கள் அடுப்படியிலேயே அதிக நேரம் செலவிடுவதை தடுக்க வீட்டில் வாடாமல்லி செடியை வளர்க்க வேண்டும். இதனை அக்னி மூலையில் பதியமிட வேண்டும். பேருக்கு ஏற்றாற்போல் இதனை வாடமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த செடி வாடினால் வீட்டில் உள்ள பெண்களுக்கு உஷ்ணம் ஏற்படுதல் போன்ற பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.
இந்த செடியை நன்கு பராமரித்து வந்தால் சந்திர பகவானின் அருள் பரிபூரணமாக கிடைத்து வீட்டில் வாஸ்து தோஷம் நீங்கி மனதில் மகிழ்ச்சி நிறையும். கடவுளுக்கு தினம் பூஜை செய்யும் நபர்கள் ஒருநாளும் ஒரு பூ என்ற முறையை தவிர்ப்பது நல்லது. இதனால் தினமும் நடக்கும் கடவுள் வழிபாட்டிற்கு வாடாமல்லி ஒரு சிறந்த தேர்வாக அமையும். இதன் மீது வண்ணத்துப்பூச்சிகள் அமர்ந்து தேன் குடிப்பதால் சுற்றுச்சூழலுக்கும் மண்ணின் வளத்திற்கும் நன்மை ஏற்படும்.
Read more: வெளிநாடுகளில் தீவிர ஆய்வு.. அந்த அளவிற்கு முருங்கைக்கீரையில் என்ன இருக்கு தெரியுமா..?