குறைந்த விலையில், அதிக ஆரோக்கியத்தை பெற வேண்டும் என்றால் நீங்கள் முதலில் எடுத்துக்கொள்ள வேண்டியது கொய்யா தான். பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த மிகவும் சக்திவாய்ந்த பழங்களில் ஒன்று தான் கொய்யா. கொய்யா பழம் நல்லது என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அதன் இலைகளிலும் மருத்துவப் பலன்கள் நிறைந்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், கொய்யா இலைகளில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் உயிரியக்க கலவைகள் உள்ளது.
பல அற்புதமான நன்மைகள் கொண்ட இந்த கொய்யா இலைகளை வைத்து ஜூஸ் தயாரித்து குடிப்பதால் எண்ணற்ற நன்மைகள் நமது உடலுக்கு கிடைக்கும். தினமும் காலையில் கொய்யா இலை சாறு குடிக்க ஆரம்பித்தால் உங்கள் உடலில் என்ன மாற்றங்கள் நடக்கும் என்பதை தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படியுங்கள்.. ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த கொய்யா இலைகளை நீங்கள் குடித்து வருவதால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது.
டானின்கள் நிறைந்துள்ள கொய்யா இலைகளின் சாறு குடிப்பதால், குடல் ஆரோக்கியம் மேம்படுவதுடன் செரிமானத்திற்கு உதவும். இவற்றை நீங்கள், உங்கள் காலை உணவில் ஒரு டம்ளர் சாற்றை சேர்த்துக் கொள்ளலாம். செரிமான பிரச்சனைகள் குனமாவதால், உடல் எடையை குறைக்க இது ஒரு நல்ல தேர்வு. கொழுப்பை எரிக்கும் பண்பு கொண்ட கொய்யா இலைகளில், குறைந்த கலோரிகள் மற்றும் நார்ச்சத்து உள்ளதால் உங்களுக்கு நீண்ட நேரம் பசி இருக்காது.
உங்கள் சருமத்திற்கு கெமிக்கல் நிறைந்த க்ரீம்களை பயன்படுத்தாமல் கொய்யா இலைகளின் சாறு குடித்துப்பாருங்கள், கொய்யா இலைகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், முதுமை மற்றும் தோல் பாதிப்பை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகிறது. இதனால் முகப்பருவைக் குறைத்து, பளபளப்பான நிறத்தைப் பெறலாம். மேலும், பல்வேறு தோல் பிரச்சினைகளுக்கு இது இயற்கையான தீர்வாக அமைகிறது.
Read more: உடல் எடை குறைய வேண்டுமா..? அப்போ இரவில் அதை செய்யாதீங்க..!