fbpx

அபிஷேகம் செய்த பால் நீல நிறமாக மாறும் அதிசயம்.. ராகு தோஷம் நீக்கும் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில்..!! எங்கே இருக்கு..?

திருநாகேஸ்வரத்தில் உள்ள இக்கோவிலில் இருக்கும் ராகு பகவானின் சிலையின் மீது பால் அபிஷேகம் செய்யும் போது பால் நீலநிறத்தில் மாறும் அதிசய நிகழ்வு நிகழ்கிறது. அத்தகைய சிறப்புமிக்க அதிசயக் கோவிலைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்

கோயில் அமைப்பு : தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள திருநாகேஸ்வரம் ராகு ஸ்தலமாகும். ராகு பகவான், சிவபெருமானை பூஜித்த நாகநாதர் கோயில் இங்கு உள்ளது. இத்தல இறைவனுக்கு நாகநாதர், அர்த்தநாரீஸ்வரர் என இரு சன்னிதிகள் உண்டு. அதைப்போல அம்மனுக்கு பிறையணி வாநுதல் உமை சன்னிதி, கிரிகுஜாம்பிகை சன்னிதியும் உண்டு. இத்தலத்தில் ராகுபகவான் உருவாக்கிய நாக தீர்த்தம், சூரிய தீர்த்தம், எம தீர்த்தம் உள்ளிட்ட 12 தீர்த்தங்கள் இருக்கின்றன. ஆதி விநாயகர், கிரிகுஜாம்பாள், சரஸ்வதி, லட்சுமி, நவக்கிரகங்கள், அறுபத்து மூவர்கள் மற்றும் இதர தெய்வங்களுக்கும் சன்னிதி உண்டு. இக்கோயிலின் 2வது பிரகாரம் தென் மேற்கு மூலையில் நாகவல்லி, நாகக்கன்னி ஆகிய தன் இரு தேவிமாருடன் மங்கள ராகுவாக தனி சன்னதியில் அமர்ந்துள்ளார்.

கோயில் வரலாறு : புராணக்கதைப்படி, இவ்விடத்தில் ஆதிஷேசன் சிவபெருமானை நோக்கி தவமிருந்து அவரிடம் வரங்களை பெற்றதாக சொல்லப்படுகிறது. அதனால்தான் இக்கோவிலில் உள்ள  சிவனை ‘நாகநாதர்’ என்று அழைக்கிறார்கள். கௌதம முனிவரால் சாபம் பெற்ற இந்திரன் இக்கோவிலில் உள்ள கிரி குஜாம்பிகையை 45 நாட்கள் புனுகு என்னும் வாசனை பொருளை வைத்து வழிப்பட்டு சாபவிமோஷனம் பெற்றார்.

இக்கோவில் மிகவும் பிரபலமடைய காரணம், இங்கேயுள்ள ராகு சிலைக்கு ராகு காலத்தில் செய்யப்படும் பாலாபிஷேகம் நீலநிறமாக மாறும் என்று சொல்லப்படுகிறது. ஆதிஷேசன், கார்க்கோடகன், தக்ஷன் போன்ற நாகங்கள் இக்கோவிலில் உள்ள சிவனை வழிப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே, இக்கோவிலில் உள்ள ராகு பகவானை வழிபடுவதால், ராகுவால் ஏற்படும் இன்னல்கள், நாக சர்ப்பதோஷம் ஆகியவற்றை நீங்குவதாக நம்பப்படுகிறது. திருமண தடை, குழந்தையின்மை, திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்னைகள் நீங்கும்.

Read more ; QR CODE-ஐ ஸ்கேன் செய்தால் போதும்.. இனி போலி மருந்துகளை ஈஸியா அடையாளம் காணலாம்..!! அசத்தல் அப்டேட்..

English Summary

Thirunageswaram Naganathaswamy temple which removes Rahu dosha..!! Where are you?

Next Post

மாஸ் காட்டிய அண்ணாமலை... மதுரை டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்ட ஏலத்தை நிறுத்திய மத்திய அரசு...!

Wed Dec 25 , 2024
Tamil Nadu BJP leader Annamalai thanks the central government for suspending the bid for the tungsten mine project

You May Like