fbpx

மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்…! ஜனவரி 31-ம் தேதி வரை கால அவகாசம்

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் ஜனவரி 31-ம் தேதி வரை வழங்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கு வரும் ஜனவரி முதல் ஜூன் வரை பயன்படுத்தக்கூடிய வகையில் ஒரு மாதத்துக்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதத்துக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் ஜன.31-ம் தேதி வரை வழங்கப்படும். அடையாறு, எம்கேபி நகர், பாடியநல்லூர், குன்றத்தூர், அயனாவரம், வடபழனி உள்ளிட்ட மாநகர போக்குவரத்துக் கழக பணிமனை, பேருந்து நிலையம் என 42 இடங்களில் காலை 8 முதல் இரவு 7.30 மணி வரை டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் பணிமனை அலுவலகத்தில் அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் டோக்கன் வழங்கப்படும்.

சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் கட்டணமில்லா பயண டோக்கன்கள் மற்றும் அடையாள அட்டைகளை புதிதாக பெற, இருப்பிட சான்றாக குடும்ப அட்டை, வயது சான்று மற்றும் 2 வண்ண புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கெனவே திட்டத்தின் வாயிலாக பயன்பெற்று புதுப்பிக்க வரும் மூத்த குடிமக்கள், அடையாள அட்டையுடன் தற்போதைய பாஸ்போர்ட் அளவிலான ஒரு புகைப்படத்தை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Free bus travel token for senior citizens

Vignesh

Next Post

பேரிழப்பு!. 2024ல் மண்ணை விட்டு பிரிந்த திரை பிரபலங்கள்!. யார் யார் தெரியுமா?

Fri Dec 27 , 2024
Celebrities: இந்திய திரை உலகம் இந்த ஆண்டு பல துயரங்களை கண்டுள்ளது. 2024ம் ஆண்டு பாலிவுட் சினிமாவில் பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.நடிப்பு, இசை, டிசைனிங், என பல துறைகளில் பாலிவுட்டில் பிரபலமாக இருந்த பலர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் யார் என்பது குறித்து பார்க்கலாம். சுஹானி பட்னாகர் : பாலிவுட் நடிகர் அமீர் கான் நடித்த தங்கல் படத்தில் நடித்த சுஹானி பட்னாகர் உடல்நலக் குறைவால் தனது 19ஆவது வயதில் […]

You May Like